11 மாதங்களில் 114 பேரின் தற்கொலை தடுக்கப்பட்டது

11 மாதங்களில் 114 பேரின் தற்கொலை தடுக்கப்பட்டது

2 mins read
404f1642-47a2-412e-b9cf-f5ee7edb4907
தற்­கொ­லைக்கு முயற்சி செய்­த­வர்­கள் அல்­லது முயற்சி செய்ய முனைந்த அத்­த­கை­யோ­ரில் 69 விழுக்­காட்­டி­னர் பெண்­கள் ஆவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சென்ற ஆண்டு ஏப்­ர­லி­லி­ருந்து இவ்­வாண்டு பிப்­ர­வரி வரை சிங்­கப்­பூர் அபய ஆலோ­ச­னைச் சங்­கம் தலை­யிட்டு, தற்­கொலை செய்­து­கொள்­ளும் உட­னடி அபா­யத்­தி­லி­ருந்து சரா­ச­ரி­யாக ஒவ்­வொரு மூன்று நாளுக்­கும் ஒரு­வ­ரைக் காப்­பாற்­றி­யுள்­ளது. மொத்­தம் 114 பேரின் தற்­கொலை தடுக்­கப்­பட்­ட­தாகச் சங்­கம் தெரி­வித்­தது.

தற்­கொ­லைக்கு முயற்சி செய்­த­வர்­கள் அல்­லது முயற்சி செய்ய முனைந்த அத்­த­கை­யோ­ரில் 69 விழுக்­காட்­டி­னர் பெண்­கள் ஆவர். 44 விழுக்­காட்­டி­னர் 20 வய­துக்­கும் 29 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள். 38 விழுக்­காட்­டி­னர் 10 வய­தி­லி­ருந்து 19 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

தற்­கொலை முயற்­சி­யில் ஈடு­பட்ட 42 விழுக்­காட்­டி­னர், குதித்து உயிரை மாய்த்­துக் கொள்ள முனைந்­த­னர்.

ஊட்­ர­மில் உள்ள தனது நிலை­யத்­தில் நேற்று ஊட­கத்­தி­ன­ரைச் சந்­தித்­த­போது சிங்­கப்­பூர் அபய ஆலோ­ச­னைச் சங்­கம் இந்­தப் புள்ளி விவ­ரங்­க­ளைப் பகிர்ந்து கொண்­டது.

தனது 24 மணி­நேர தொலை­பே­சிச் சேவை, 'கேர்­டெக்ஸ்ட் வாட்ஸ்­அப்' சேவை ஆகி­ய­வற்­றின் தொண்­டூ­ழி­யர்­களும் நெருக்­கடி உதவி ஊழி­யர்­கள் 20 பேரும் எவ்­வாறு ஒருங்­கிை­ணந்து தற்­கொலை அபா­யம் அதி­க­முள்ள சம்­ப­வங்­க­ளுக்கு உத­வு­கின்­ற­னர் என்­ப­தைச் சங்­கம் விளக்­கி­யது.

பெரும்­பா­லான சமூ­கச் சேவை­ மையங்கள் மூடி­யி­ருக்­கும் இர­வு­நே­ரங்­களில்தான் இத்­த­கைய சம்­ப­வங்­கள் நிகழ்­கின்­றன. தொலை­பே­சி­யில் பேச முடி­யா­த­வர்­க­ளி­டம் 'கேர்­டெக்ஸ்ட்' சேவை­யைப் பயன்­ப­டுத்­தும்­படி தொண்­டூ­ழி­யர்­கள் கூறுவர். தொலை­பே­சிச் சேவைக்­குத் துணை­யாக குறுஞ்­செய்­திச் சேவை 2020ல் தொடங்­கப்­பட்­டது.

2022ல் 11,107 பேர் குறுஞ்­செய்தி உத­விச் சேவை­யைப் பயன்­ப­டுத்­தி­னர். உதவி கோரி 27,341 பேர் தொலை­பே­சி­யில் அழைத்­த­னர். இது 2020ல் அழைத்த 11,591 பேரை­விட இரு மடங்கு அதி­கம்.

சென்ற ஆண்டு செப்­டம்­பர் மாதம் நில­வ­ரப்­படி, தன்­னி­டம் உதவி கேட்டு ஆலோ­சனை பெறு­வோ­ரில் 82 விழுக்­காட்­டி­னர் 29 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள் என்று சுட்­டிக்­காட்­டிய சங்­கம், அபா­யத்­தில் உள்ள இளை­ய­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­து­வ­ரும் நிலை­யில் அவர்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கத் தேவை­யுள்­ள­தா­கக் கூறி­யது.

தேவைப்­பட்­டால் காவல்­துறை, சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை ஆகி­ய­வற்றை அழைப்­ப­தா­கச் சங்­கம் கூறி­யது. தற்­கொ­லைக்கு முயன்­ற­வர்­க­ளுக்­கான ஆத­ர­வுக் குழு­வை­யும் அது தொடங்­கி­யுள்­ளது.

சங்­கத்­தில் தற்­போது 400 தொண்­டூ­ழி­யர்­கள் உள்­ள­னர். அவர்­க­ளுக்கு ஆறு மாதப் பயிற்சி வழங்­கி மதிப்பிடுவதாகச் சங்கம் குறிப்பிட்டது.