தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கட்டிப்பிடித்ததும் காணாமல் போனது: பேங்காங்கில் திருடுபோன தங்கச் சங்கிலி

1 mins read
613242c8-4929-4b6a-a218-667d76f98505
-

தாய்­லாந்து தலை­ந­கர் பேங்­காக்­குக்­குச் சென்ற சிங்­கப்­பூ­ர் சுற்­றுப்­ப­யணி ஆண்டி கோ குவான் யோங், 52, தமது நண்­ப­ரு­டன் அதி­கா­லை­யில் வீதி­யில் நடந்­து­கொண்­டி­ருந்­தார்.

அப்­போது திரு­நங்கை ஒரு­வர் அவரை அணுகி அணைத்­தார்.

தம்மை நட்­பு­டன் அணைத்த தாக திரு கோ நினைக்க, சில விநா­டி­களில் சங்­கி­லி­யின் கொக்­கி­யைக் கழற்­றி­விட்டு அந்­ந­பர் திரு கோவின் கழுத்­தில் இருந்து தங்­கச்­சங்­கி­லி­யைப் பறித்­துக் கொண்டு ஓடி­னார்.

திரு கோவும் அவ­ரது நண்­ப­ரும் திரு­நங்­கையைத் துரத்­திப் பிடித்து தங்­கச் சங்­கி­லியை மீட்­ட­னர். பின்­னர் அவர்­கள் காவல்­து­றையை அழைத்­த­னர்.

காவல்­து­றை­யி­னர் அங்­கு சென்­ற­போது, பிடி­பட்ட திரு­நங்­கை­யி­டம் தனி­ந­பர் ஆவ­ணங்­கள் ஏதும் இல்லை.

ஃபேஸ்புக்­கில் அது பற்றி பதி­விட்ட பேங்­காக்­கின் லிம்­பினி வட்­டா­ரக் காவல்­துறை, அச்­சம்­ப­வம் அசோக் ரயில் நிலை­யத்­தின் அருகே நேற்று முன்­தி­னம் அதி­காலை 12.30 மணி அள­வில் நடந்­த­தா­கக் கூறி­யது.

சங்­கி­லி­யின் மதிப்பு சுமார் $1,100 ஆகும் என்று கூறப்­பட்­டது.

சங்­கி­லி­யைப் பறித்­த­வர், கம்­போ­டி­யா­வி­லி­ருந்து சட்­ட­வி­ரா­த­மாக தாய்­லாந்­தில் நுழைந்­த­வர் என்­றும் அவர் கிங்­கொன் எனும் பெயரை வைத்­துக்­கொண்­ட­தா­க­வும் காவல்­துறை கூறி­யது.