கேலாங் காப்பிக் கடையில் ரத்தம் சொட்ட சொட்ட சண்டை போட்ட இருவர் கைது

கேலாங் காப்பிக் கடையில் ரத்தம் சொட்ட சொட்ட சண்டை போட்ட இருவர் கைது

1 mins read
432a8279-9f2e-492f-b820-78f4a0fdba82
-

கேலாங் காப்­பிக் கடை­யில் புதன்­கி­ழமை காலை ரத்­தம் வழி­வ­து­கூட தெரி­யா­மல் சண்டை போட்ட இரு­வரை காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

அவர்­களில் 32 வயது நபர் டான் டோக் செங் மருத்­துவ மனை­யில் சேர்க்­கப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

பின்­னர், பொது இடத்­தில் சண்டை போட்­ட­தற்­கா­க­வும் போதைப்­பொ­ருள் குற்­றங்­கள் என சந்­தே­கிக்­கப்­படும் குற்­றச் ­செ­யல்­க­ளுக்­கா­க­வும் அவர் கைது செய்­யப்­பட்­டார். இரண்­டா­வது நப­ரும் பொது இடத்­தில் சண்­டை­யிட்­ட­தற்­கா­க­வும் பொது அமை­தி­யைக் கெடுத்­த­தற்­கா­வும் கைது செய்­யப்­பட்­டார் என காவல்­துறை தெரி­வித்­தது.

கேலாங்­, லோரோங் 17 காலை 8.10 மணி­ய­ள­வில் அந்த வட்­டாரத்­தில் கடை­கள் திறக்­கப்­படு ­வ­தற்கு முன்பு சண்டை நடந்­தது என்று சீன மொழி நாளி­தழ் ஷின் மின் குறிப்­பிட்­டது.

ஒன்­பது மணி­ய­ள­வில் கடைக்கு வந்­த­போது காவல்துறை அதி­கா­ரி­கள் பலர் அங்கு இருந்­த­தைப் பார்த்­த­தாக 'பாக் குவா' கடை ஊழி­யர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

காப்­பிக் கடை­யில் இருந்த மேசை­கள், தரை­, கை கழு­வும் இடங்களில் ரத்­தக் கறை­கள் காணப்­பட்­டன. காவல்­து­றை­ விசா­ரணை தொடர்­கிறது.