புகைப்படக் கலைஞர் ஜெயப்பிரகாஷ் போஜன், சென்ற செவ்வாய்க்கிழமை பாசிர் ரிஸ் பூங்காவில் அரிய வகை பச்சை நிற ஆமையைக் (படம்) கண்டார். பாறைகளில் சிக்கியிருந்த ஆமையை விடுவிக்க எண்ணி அவர் தூக்கியபோது அது ஏற்கெனவே மாண்டுவிட்டதை உணர்ந்தார்.
பின்னர் லீ கோங் சியன் இயற்கை வரலாற்று அரும்பொருளகத்திற்கு அதுகுறித்துத் தகவல் அளித்தார்.
அரும்பொருளகத்தில் இடம் இல்லாததால் ஆய்வுக்காக இந்த ஆமையின் உடலை அது ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
தொடர்ந்து, ஆமையின் உடலை மீட்க, தேசியப் பூங்காக் கழகம் அங்கே சென்றபோது அது அங்கே காணப்படவில்லை.
பச்சை நிற ஆமை 0.9 முதல் 1.2 மீட்டர் வரை வளரக்கூடியது. சிங்கப்பூரில் இது அருகிவரும் இனமாகக் கருதப்படுகிறது. 2020ஆம் ஆண்டில் இருந்து ஆறு கடல் ஆமைகள் இங்கே மாண்டு கிடக்கக் காணப்பட்டன.

