மெக்பர்சன் வட்டாரத்தில் துப்புரவுப் பணியாளர் தாக்கப்பட்டார்

மெக்பர்சன் வட்டாரத்தில் துப்புரவுப் பணியாளர் தாக்கப்பட்டார்

2 mins read
1d93a498-108c-40f3-983a-08eb9b3a3c36
-

மெக்­பர்­சன் வட்­டா­ரத்­தில் துப்­ப­ர­வுப் பணி­யா­ளர் ஒரு­வர் தாக்­கப்­பட்­டார். தாக்­கப்­பட்ட ஊழி­யர் பங்­ளா­தே­ஷைச் சேர்ந்­த­வர். நேற்று முன்­தி­னம் அந்­தத் துப்­பு­ர­வுப் பணி­யா­ளரை ஆட­வர் ஒரு­வர் நெஞ்­சில் குத்­தி­ய­தாக மெக்­பர்­சன் தனித்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டின் பெய் லிங் தெரி­வித்­தார்.

தாக்­கிய ஆட­வர் இதற்கு முன்பு நகர மன்ற துப்­பு­ர­வுப் பணி ஊழி­யர்­க­ளுக்­குத் தொல்லை விளை­வித்து அவர்­க­ளது துடைப்­பங்­களை உடைத்­த­தாக திரு­வாட்டி டின் கூறி­னார்.

துப்­பு­ர­வுப் பணி­யா­ள­ரைத் தாக்­கி­ய­போது அந்த ஆட­வர் குடி­போ­தை­யில் இருந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று காணொளி மூலம் திரு­வாட்டி டின் நேற்று முன்­தினம் தெரி­வித்­தார். அந்­தக் காணொளி சமூக வலைத்­த­ளத்­தில் நேரலையாகக் காட்டப்பட்டது.

காணொ­ளி­யில் திரு­வாட்டி டின்­னு­டன் பங்­ளா­தே­ஷி­ய­ரான 48 வயது திரு பாபுல் இருக்­கி­றார். அவ­ரது மக­னான 20 வயது அக­மது ஷியா­மைத்­தான் அந்த ஆட­வர் தாக்­கி­னார்.

தந்­தை­யும் மக­னும் நகர மன்­றத்­தைச் சேர்ந்த துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­கள் என்று திரு­வாட்டி டின் கூறி­னார்.

மரின் பரேட் நகர மன்­றத்­துக்­காக திரு பாபல் பல ஆண்­டு­க­ளா­கப் பணி­பு­ரிந்து வரு­வ­தா­க­வும் அவர் துப்­பு­ரவு மேற்­பார்­வை­யா­ள­ராக வேலை செய்­வ­தா­க­வும் திரு­வாட்டி டின் தெரி­வித்­தார்.

திரு அக­ம­தைத் தாக்­கிய ஆட­வ­ரின் அடை­யா­ளம் இன்­னும் தெரி­ய­வில்லை. திடீ­ரென்று எதிர்­பா­ராத வித­மாக அந்த ஆட­வர் தமது மக­னின் நெஞ்­சில் குத்­தி­ய­தாக திரு பாபுல் கூறி­னார்.

தாக்­கு­தலை அடுத்து, திரு அக­மது மருத்­து­வரை நாடி­னார்.

இந்­தத் தாக்­கு­தல் புளோக் 87 செர்­கிட் சாலை­யின் தரைத்­த­ளத்­தில் நிகழ்ந்­த­தாக என்­ஆர்டி டிரே­டிங் அண்ட் இஞ்­சி­னி­ய­ரிங் நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் சக்­தி­

வே­லன் நட­ராஜா நேற்று தெரி­வித்­தார்.

திரு சக்­தி­வே­ல­னின் நிறு­வ­னத்தை மரின் பரேட் நகர மன்­றம் பணி­ய­மர்த்தி உள்­ளது.

இதற்கிடையே, வன்முறை சகித்துக்கொள்ள முடியாத ஒன்று என்று திருவாட்டி டின் கூறினார்.

"ஊழியர்களின் செயல்பாட்டில் மேம்பாடு தேவை எனக் கருதினால் எங்களிடம் தெரிவியுங்கள். ஆனால் வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பாத ஊழியர்களைத் தாக்குவது எவ்வகையிலும் நியாயம் இல்லை," என்றார் திருவாட்டி டின்.