திறனுக்கு முன்னுரிமை அளிக்க கல்விமுறை முயல வேண்டும்

திறனுக்கு முன்னுரிமை அளிக்க கல்விமுறை முயல வேண்டும்

2 mins read
d5572ad1-34b1-4da7-8c32-63dd59a283ce
-

மதிப்பெண், தரங்களுக்கு அப்பாலும் ஒருமித்த கவனம் திரும்ப வேண்டும் என்றார் அமைச்சர்

அனைத்­து­லக மாண­வர் மதிப்­பீட்டுச் செயல்­திட்­டத்­தில் (பிசா) சிங்­கப்­பூர் தலை­சி­றந்த இடத்­தைப் பிடித்து இருக்­கிறது என்­பது உலகம் அறிந்த ஒன்று.

அதே நேரத்­தில் உன்­ன­த­மான மதிப்­பெண்­கள், கல்­வித் தரங்­களைச் சாதிப்­ப­தோடு நின்று­விடா­மல் அதற்கு அப்­பா­லும் ஆற்­ற­லுக்கு முன்­னு­ரிமை தரும் ஒரு நிலையை நோக்­கி சிங்­கப்­பூரர்­கள் செல்ல வேண்­டும் என கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் அறை­கூ­வல் விடுத்துள்ளார்.

அத்­த­கைய ஒரு நிலை­யில் ஒரு­வரின் தொடக்­கம் எப்­படி இருந்­தா­லும் அவ­ரின் முழு ஆற்­ற­லும் மேம்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் கொடுக்­கப்­படும் என்­றா­ர­வர்.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­கலைக்­க­ழ­கத்­தில் நேற்று நடந்த ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கல்­விக் கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்ட சுமார் 300 மாண­வர்­க­ளி­டையே அமைச்­சர் உரை­யாற்­றி­னார்.

மீள்­தி­ற­னு­டன்­கூ­டிய, இயற்கை வளங்­க­ளு­டன் நீடித்து நிலைத்து இருக்­கும் எதிர்­கா­லத்­தைப் பலப்­படுத்­து­வ­தில் உயர்­கல்­வி­யின் பங்கு பற்றி அந்­தக் கருத்­த­ரங்கு நடந்­தது. சுமார் 30 மாண­வர்­கள் மெய்­நி­கர் ரீதி­யில் பங்கேற்றனர்.

தகு­திக்கு முன்­னு­ரி­மை­யைப் பலப்­ப­டுத்­து­வ­தில் உயர்­கல்வி நிலை­யங்­கள் முக்­கிய பங்­காற்­று­கின்­றன என்று கூறிய அமைச்­சர், கல்­வியை அதி­க­மா­னோர் எட்­டு­வ­தற்கு வழி செய்­வ­தற்கு அப்­பா­லும் ஒவ்­வொ­ரு­வ­ரின் வெவ்­வே­றான தேவை­க­ளை­யும் பலத்­தை­யும் நிறை­வேற்­றும் வகை­யில் ஏற்ற பாடத்­திட்­ட­மும் தேவைப்­ப­டு­வ­தா­கக் கூறினார்.

இந்­தத் தேவையை நிறை­வேற்றும் வகை­யில் ஏற்­கெனவே உயர்­கல்வி நிலை­யங்­கள் செயல்­படு­வதை அவர் சுட்­டி­னார்.

அந்நிலை­யங்­கள் ஆற்றல்­களைப் பல­மு­னைப்­ப­டுத்த வேண்­டிய தேவை உள்ளதாகவும் இதன்­ மூ­லம் பல­த­ரப்­பட்ட யோச­னை­கள், கருத்­து­கள் உரு­வாக அவை வழி செய்ய வேண்டி இருக்­கிறது என்­றும் திரு சான் குறிப்­பிட்­டார்.

"தங்­க­ளுக்கு அப்­பா­லும் சிங்­கப்­பூ­ரர்­கள் சிந்­திக்க வேண்­டும். அப்­படி செயல்­பட்டு அவர்­கள் தனிப்­பட்ட தங்கள் சாத­னை­களை மட்டு­மன்றி சமூ­கத்­திற்கு ஆற்­றும் தொண்­டு­கள், மற்­ற­வர்­க­ளின் நல்­வாழ்­வுக்­குச் செய்­யும் உத­வி­கள் ஆகி­ய­வற்­றை­யும் கவ­னத்­தில் கொண்டு தங்­க­ளு­டைய வெற்­றியை வரை­ய­றுக்க வேண்­டும்," என்­றும் அமைச்­சர் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

இயற்கை வளங்­க­ளைக் கட்­டிக்­காப்­ப­தில் சிங்­கப்­பூ­ரின் வாழும் ஆய்­வுக் கூடங்­க­ளாக உயர்­கல்வி நிலை­யங்­கள் திகழ்­கின்­றன என்­றார் திரு சான். எதிர்­கால நக­ரங்­க­ளை­யும் சமூ­கங்­க­ளை­யும் கற்­பனை செய்­வ­தில் உயர்­கல்வி நிலை­யங்­கள் சிந்­தனை சிற்­பி­களா­கத் திகழ வேண்­டும்.

எரி­சக்தி பய­னீடு பற்­றிய சிந்­தனை ஒரு­பு­றம் இருக்க, நகர்­களை வடி­வ­மைப்­பது, போக்கு­வரத்து முறை­கள், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, கழிவு மேலாண்மை போன்ற துறை­க­ளி­லும் சிந்­த­னை­கள் இடம்­பெற வேண்­டும் என்றும் அவர் தெரி­வித்­தார்.