பொங்கோல் பிளேஸ் பகுதியில் மின்சைக்கிளால் சாலையோரத்தில் தீ மூண்டது.
தீயணைப்பானைக் கொண்டு தீ அணைக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
இச்சம்பவம் சனிக்கிழமை (11 மார்ச்) இரவு நிகழ்ந்தது.
இரவு 9.35 மணிக்குச் சம்பவம் குறித்துத் தங்களுக்குத் தகவல் வந்ததென சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.