நீட்டிக்கப்படும் 'கிராப்ஷேர்' சேவை

நீட்டிக்கப்படும் 'கிராப்ஷேர்' சேவை

1 mins read
f17986f1-da1f-4348-b8bf-939d7c59b3b5
'கிராப்' நிறுவனம் நேற்று முன்தினம் பின்னிரவு 1 மணி முதல் தனது பகிர்வுச் சேவைகளை அடுத்த அறிவிப்பு வரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கோப்புப்படம்: எஸ்டி -

'கிராப்ஷேர்' சேவையை சிங்கப்பூர் முழுவதும் இனி தினமும் மாலை ஐந்து மணி முதல் இரவு 11 மணிவரை பயன்படுத்தலாம்.

திங்கட்கிழமை (மார்ச் 13) முதல் இந்த மாற்றம் நடப்புக்கு வருகிறது.

ஒரே சமயத்தில் குறிப்பிட்ட பாதையில் செல்லும் பல பயணிகளை ஒரு வாடகை வாகனத்தில் ஏற்றிச்செல்ல வகைசெய்யும் கிராப் நிறுவனத்தின் 'கிராப்ஷேர்' சேவைக்கான கட்டணம் குறைவு.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காரணமாக கிட்டத்தட்ட மூவாண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த 'கிராப்ஷேர்' சேவை இவ்வாண்டு ஜனவரி மாதம் மீண்டும் தொடங்கப்பட்டது.

போன விஸ்தா உள்ளிட்ட பகுதிகளில் சோதனையோட்டத்திற்குப் பிறகு சேவை மற்ற சில பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டது.

முடிவுகள் நம்பிக்கையளிக்கும் வண்ணம் அமைந்துள்ளதால் சோதனை முயற்சி ஏப்ரல் மாதம் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது.