சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த தீயணைப்பாளர்கள், எண் 28 துவாஸ் சவுத் அவென்யூ 8 முகவரியில் அமைந்துள்ள கிடங்கில் நேற்று மாலை மூண்ட தீயை அணைக்க போராடினர். அதில் இருவர் காயமடைந்தனர்.
தீ மூண்டதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகத்தில் இடம்பெற்றன.
தீயை முற்றிலும் அணைக்க அதிக நேரம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக குடிமைத் தற்காப்புப் படை முன்னதாகக் கூறியது. கிடங்கு, தொழில்துறை கட்டடம் ஒன்றுடன் இணைந்து உள்ளது. தீயணைப்பு தொடர் வதால் அந்தப் பகுதியைத் தவிர்க்கும்படி மக்களுக்கு ஆலோசனை கூறியதாக இந்தப் படை நேற்று இரவு 7.19 மணிக்குத் தெரிவித்தது.

