சிங்கப்பூரில் சுமார் 600,000 டிரேஸ் டுகெதர் கருவிகள் திருப்பி ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.
அரசாங்கம் விநியோகித்த அந்தக் கருவிகளைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை நேற்றுடன் முடிவடைந்தது.
அவற்றைத் திருப்பி ஒப்படைக்காதவர்கள், அதை எந்தவொரு மின்னணு குப்பைத் தொட்டியிலும் போட்டு மறுபுழக்கத்திற்கு வகை செய்யலாம் என்று அமைச்சர் லிங்டின் பக்கத்தில் குறிப்பிட்டார்.
திரும்பப் பெறப்பட்ட கருவிகள் எதிர்காலத்தில் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளும் வகையில் புதுப்பிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு விடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமி தலைவிரித்தாடியபோது தடம் அறிவதற்கு உதவியாக அந்தக் கருவிகள் விநியோகிக்கப்பட்டன.
மின்னணுப் பொருள் குப்பைத் தொட்டிகள் இருக்கும் இடங்களை https://lnkd.in/gZcphEr9 என்ற இணையத்தளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
சமூக நிலையங்களில் பிப்ரவரி 13 முதல் இம்மாதம் 12ஆம் தேதி வரை செயல்பட்ட 108 வசூல் நிலையங்களில் அந்தக் கருவிகள் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.

