10 பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகைக்கு முன்பதிவு தேவை

10 பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகைக்கு முன்பதிவு தேவை

1 mins read
d31434d3-a2d3-405c-b976-2d8fe2f2e76e
-

முஸ்­லிம்­கள் மார்ச் 23ஆம் தேதி புனித ரம­லான் மாதத்தை வர­வேற்­கும் வேளை­யில், குறிப்­பிட்ட சில பள்­ளி­வா­சல்­களில் இர­வு­நேர தரா­வீஹ் தொழு­கை­யில் ஈடு­பட முன்­ப­திவு தேவைப்­படும்.

ரம­லான் மாதத்­தின்­போது 67 பள்­ளி­வா­சல்­களில் 98,550 தொழுகை இடங்­கள் வழங்­கப்­படு­வ­தாக சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் (முயிஸ்) நேற்று தெரி­வித்­தது.

ஆனால், குறிப்­பிட்ட இட­வசதி­யும் அதிக தேவை­யும் உள்ள பள்­ளி­வா­சல்­களில் முன்­பதிவு செய்­து­கொள்ள வேண்டுமென முயிஸ் கூறி­யது.

அல் இஸ்லா, அல் இஸ்­திக்­ஃபார், அல் தக்­குவா, தாருல் குஃப்ரான், அன் நூர், தாருல் மக்­முர், யூசோஃப் இஷாக், அல் அப்­ரார், தாசேக் உதாரா, அல் கைர் ஆகி­யவை அந்த 10 பள்­ளி­வா­சல்­கள். மார்ச் 16ஆம் தேதி முன்­ப­தி­வு­கள் தொடங்­கு­கின்­றன. prayerbooking.ourmasjid.sg எனும் இணை­யப் பக்­கத்­தில் முன்­ப­திவு செய்­து­கொள்­ள­லாம்.

தரா­வீஹ் தொழு­கைக்கு முன்­ப­தி­வு­கள் தேவை என்­றா­லும், ரம­லான் மாதத்­தின் கடைசி 10 இர­வு­களில் நடை­பெ­றும் கியாமுல் லைல் தொழுகைக்கு முன்­ப­தி­வு­கள் தேவைப்­ப­ட­மாட்டா.