பொதுப் போக்குவரத்து ஊழியரணி 4% அதிகரிக்கும்

பொதுப் போக்குவரத்து ஊழியரணி 4% அதிகரிக்கும்

2 mins read
a2760f46-1d7a-4c48-939d-b0b8c4327a5e
ஜூரோங் வட்­டார ரயில் பாதை, குறுக்­குத் தீவு ரயில் பாதை ஆகி­ய­வற்­றின் மூலம் சிங்­கப்­பூ­ரின் ரயில் கட்­ட­மைப்பு விரி­வ­டை­கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொதுப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை 2025ஆம் ஆண்­டுக்­குள் நான்கு விழுக்­காடு ஏற்­றம் காணும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஜூரோங் வட்­டார ரயில் பாதை, குறுக்­குத் தீவு ரயில் பாதை ஆகி­ய­வற்­றின் மூலம் சிங்­கப்­பூ­ரின் ரயில் கட்­ட­மைப்பு விரி­வ­டை­கிறது.

இத­னால் மேலும் 880 பேர் வேலை­யில் அமர்த்­தப்­ப­டு­வர் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

2018ஆம் ஆண்­டி­லி­ருந்து ரயில் துறை­யில் ஏறத்­தாழ 1,000 புதிய வேலை­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

பொதுப் போக்­கு­வ­ரத்­துத் துறைக்­கான புதிய திட்­டம் ஒன்­றைப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.

இதன்­மூ­லம் ரயில், பேருந்து ஊழி­யர்­க­ளுக்­கான திறன் மேம்­பாடு, ரயில் சேவை­யின் நம்­ப­கத்­தன்­மையை மேம்­ப­டுத்­து­தல், கரிம வெளி­யேற்­றத்­தைக் குறைக்க தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­து­தல், பய­ணி­க­ளுக்­கான சேவையை மேம்­ப­டுத்­து­தல் ஆகி­ய­வ­வற்­றுக்­கான திட்­டங்­கள் விவ­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

தொழில்­துறை உரு­மாற்று வரை­ப­டம் மிக­வும் முக்­கி­ய­மா­னது என்­றார் அமைச்­சர் ஈஸ்­வ­ரன். அடுத்த சில ஆண்­டு­க­ளுக்­கான நிலப் போக்­கு­வ­ரத்து இலக்­கு­களை அது எட்ட உத­வும் என்­றார் அவர்.

ஆக அண்­மைய திட்­டத்­தின்­படி, தேசிய போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­ சங்­கம், பொதுப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­று­டன் இணைந்து ஊழி­ய­ர­ணி­யின் உற்­பத்­தித் திற­னை­யும் துரி­த­மான செயல்­மு­றை­யை­யும் மேம்­ப­டுத்த பயிற்சி அளிக்­கப்­போ­வ­தாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் கூறி­யது.

2020ஆம் ஆண்­டி­லி­ருந்து 2,900க்கும் அதி­க­மான ரயில் சேவை ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்சி அளிக்க ரயில் மனி­த­வள மேம்­பாட்­டுச் சலு­கைத் திட்­டம் உத­வி­யி­ருப்­ப­தாக ஆணை­யம் கூறி­யது.

பொதுப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் மின்­சார பேருந்­து­க­ளைப் பரா­ம­ரிக்­க­வும் பழு­து­பார்க்­க­வும் தொழில்­நுட்­பர்­க­ளுக்­குப் பயிற்சி அளிக்­கப்­ப­டு­கிறது.

மின்­சா­ரப் பேருந்­து­களை எப்­படி ஓட்­டு­வது என்­பது குறித்து ஓட்­டு­நர்­க­ளுக்­குப் பயிற்சி அளிக்­கப்­ப­டு­கிறது.

முறை­யான பயிற்சி அளிக்க பேருந்து தயா­ரிக்­கும் நிறு­வ­னங்­கள், சங்­கம், நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து செயல்­ப­டு­வ­தாக சிங்­கப்­பூர் பேருந்­துப் பயிற்­சிக் கழ­கம் கூறி­யது.

2030ஆம் ஆண்­டுக்­குள் பொதுப் பேருந்­து­களில் 50 விழுக்­காடு மின்­சா­ரப் பேருந்­து­க­ளாக இருக்க வேண்­டும் என்று சிங்­கப்­பூர் இலக்கு கொண்­டுள்­ளது.

அறி­மு­கத் திட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூ­ரில் ஏற்­கெ­னவே 60 மின்

சாரப் பேருந்­து­கள் இயங்­கு­கின்­றன.

டீச­லில் இயங்­கும் பேருந்­து

­க­ளுக்­குப் பதி­லாக 400 பேருந்­து­களை இயக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

எனவே, இந்த மின்­சா­ரப் பேருந்­து­களை இயக்­கும் நிறு­

வ­னத்தை நிர்­ண­யிக்க இம்­மா­தம் ஏலக்­குத்­தகை ஒன்­றுக்கு அழைப்பு விடுக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.