சிங்கப்பூர், ஜோகூர் தலைவர்கள் வரவேற்பு

1 mins read
1e8410fd-c68e-4aad-9e36-f7f162efa539
சிங்­கப்­பூர்-ஜோகூர் எல்லை மீண்­டும் திறக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து எல்லை தாண்­டிய பய­ணங்­களும் பரி­மாற்­றங்­களும் முழு­மை­யாக மீண்­டும் தொடங்­கப்­பட்­டி­ருப்­பதை சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் வர­வேற்­றுள்­ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர்-ஜோகூர் எல்லை மீண்­டும் திறக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து எல்லை தாண்­டிய பய­ணங்­களும் பரி­மாற்­றங்­களும் முழு­மை­யாக மீண்­டும் தொடங்­கப்­பட்­டி­ருப்­பதை சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் வர­வேற்­றுள்­ளது. ஜோகூ­ருக்கு நேற்று ஒரு­நாள் பய­ணம் மேற்­கொண்ட வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் ஜோகூர் சுல்­தான் இப்­ரா­கிம் இஸ்­கந்­தர், பட்­டத்து இள­வ­ர­சர் துங்கு இஸ்­மா­யில் சுல்­தான் இப்­ரா­கிம், முத­ல­மைச்­சர் ஒன் ஹபீஸ் ஹாசி ஆகி­யோ­ரைச் சந்­தித்­தார் என்று சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சின் அறிக்கை தெரி­வித்­தது.

சிங்­கப்­பூர்-ஜோகூர் இடையே நீண்­ட­கால, நெருக்­க­மான உற­வு­களை இரு­நாட்­டுத் தலை­வர்­களும் மீண்­டும் உறு­திப்­ப­டுத்­தி­னர். சிங்­கப்­பூர், ஜோகூர் இடையே புதிய துறை­களில் ஒத்­து­ழைப்பை ஆராய்­வ­தற்­கும் இரு­த­ரப்­பின் பரஸ்­பர நன்­மை­க­ளுக்காக அணுக்­க­மான ஒத்­து­ழைப்­பைத் தொடர்­வ­தற்­கும் இரு­வ­ரும் உடன்­பட்­ட­தாக அறிக்கை தெரி­வித்­தது.