நிலச் சொத்து தொடர்பான கூட்டு வர்த்தக முயற்சியிலிருந்து $15.8 மில்லியனைக் கையாடியதாக சாக்கே நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஆண்டி ஓங் சியூ குவீ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சாக்கே நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்ந்த உணவு, பான நிறுவனமாகும்.
2012ஆம் ஆண்டில் கிரிஃபின் சொத்து முதலீட்டு நிறுவனத்திலிருந்து தமக்குப் பங்குகள் இருக்கும் இஆர்சி இன்டர்நேஷனல், இஆர்சி யுனிகெம்பஸ் ஆகிய நிறுவனங்களுக்கு பணத்தை ஓங் இடம் மாற்றியதாகக் கூறப்படுகிறது.

