ஹவ்காங் வீட்டில் தீ; 130 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

ஹவ்காங் வீட்டில் தீ; 130 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

1 mins read
71c3e01f-9ac7-4d66-ba58-65501ac952bb
-

ஹவ்­காங் வட்­டா­ரத்­தில் நேற்று முன்­தினம் இரவு வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு ஒன்று தீப்­பற்றி எரிந்­தது.

ஹவ்­காங் அவென்யூ 4ல் அமைந்­துள்ள புளோக் 603ன் நான்­கா­வது மாடி­யில் உள்ள ஒரு வீட்­டில் தீமூண்­டது.

இதன் கார­ண­மாக அந்­தக் கட்­ட­டத்­தில் வசிக்­கும் ஏறத்­தாழ 130 பேர் தங்­கள் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யே­றி­னர்.

கண்­ணா­டி­கள் உடை­யும் சத்­தம் கேட்­ட­தா­க­வும் பொருள்­கள் தீப்­பற்றி எரி­யும் வாடை அப்­ப­கு­தி­யைச் சூழ்ந்­த­தா­க­வும் பாதிக்­கப்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­கள் ஷின்­மின் நாளி­த­ழி­டம் கூறி­னர்.

தீக்கு இரை­யான வீட்­டில் ஒரு தம்­ப­தி­யர் வசித்து வந்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

இரு­வ­ரும் 70 வய­துக்­கும் 80 வய­துக்­கும் உட்­பட்­ட­வர்­கள்.

அதி­கா­ரி­கள் சம்­பவ இடத்­தைச் சென்­ற­டை­வ­தற்­குள் இரு­வ­ரும் அங்­கி­ருந்து வெளி­யே­றி­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட வீட்­டில் மொத்­தம் ஏழு பேர் வசித்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் தீச்­சம்­ப­வம் நிகழ்ந்­த­போது அந்த இரு­வர் மட்­டுமே அங்கு இருந்­த­னர். நேற்று முன்­தி­னம் இரவு 8.55 மணி அள­வில் தீச்­சம்­ப­வம் குறித்து தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது.

வீட்­டின் படுக்­கை­ய­றை­யில் தீமூண்­ட­தா­க­வும் மின்­கோ­ளாறு கார­ண­மாக தீச்­சம்­ப­வம் ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்றும் ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது. தீச்­சம்­ப­வத்­தில் யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

தீயில் கருகிய வீடு. பாதிக்கப்பட்ட கட்டடத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட 130 பேர் வெளியேற்றப்பட்டனர். சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை