புத்தாக்கம், தொழில்நுட்பம் மகளிர் மேம்பாட்டுக்கு முக்கியம்

புத்தாக்கம், தொழில்நுட்பம் மகளிர் மேம்பாட்டுக்கு முக்கியம்

2 mins read
f93ae9ff-f8e7-4a9d-89f6-e761e7580313
-

புத்­தாக்­கம், தொழில்­நுட்­பம் ஆகிய­வற்­றில் மக­ளிர் ஈடு­பாடு காட்­டு­வது அவர்­க­ளின் மேம்­பாட்­டுக்கு முக்­கி­ய­மாக இருக்­கிறது. இது அல்­லாத பொரு­ளி­யல் வளர்ச்சி நீடித்து நிலைத்­தி­ருக்க முடி­யாது.

புத்­தாக்­கம், தொழில்­நுட்­ப­வியல் மாற்­றங்­களில் பங்­கேற்­க­வில்லை என்­றால் கல்வி, பொரு­ளி­யல் வலு­வூட்­டல், வேலை­வாய்ப்பு ஆகி­ய­ துறைகளில் பெண்­கள் அடைந்­துள்ள முன்­னேற்­றம் சரிந்­து­வி­டும் என்று மக­ளிர் நிலை குறித்த ஐக்­கிய நாட்டு ஆணை­யம் எச்­ச­ரித்­துள்­ளது.

இந்த விவ­ரங்­களை நேற்று முன்­தி­னம் அனைத்­துலப் பெண்­க­ளுக்­கான அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணி­தம், மருத்­து­வக் கருத்­த­ரங்­கின்­போது தெரி­வித்­தார் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் ஷுவெ­லிங்.

"அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணி­தம் ஆகிய துறை­களில் பெண் தொழில்­நுட்ப நிபு­ணர்­க­ளின் உல­க­ளா­விய விகி­தம் சுமார் 28%," என்று கூறிய அமைச்­சர், சிங்­கப்­பூர் போல, பல நாடு­கள் அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணி­தம் ஆகிய துறை­களில் பெண்­க­ளின் ஈடு­பாட்டை அதி­க­ரிக்­க­வும், அவர்­கள் அத்­து­றை­களில் சிறந்து விளங்க தடை­யாக இருப்­ப­வற்றை அகற்­ற­வும் முனைப்புக் காட்டி வரு­கின்­றன," என்­றார்.

உல­கின் உயர்ந்த நிலை­யில் உள்ள தொழில்­நுட்ப நடு­வம் என்ற முறை­யில் சிங்­கப்­பூர் இன்­னும் அதி­க­மான பெண்­களை அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணி­தம் ஆகிய துறை­களில் சேர ஊக்­கு­விப்­ப­தற்கு சிறந்த நிலை­யில் உள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் தொழில்­நுட்ப நிபு­ணர்­களில் 41 விழுக்­காட்­டி­னர் பெண்­கள் என்று குறிப்­பிட்ட திரு­வாட்டி சுன், எல்லாத் துறை­களி­லும் குறிப்­பாக, தொழில்­நுட்­பம் போன்ற உயர் வளர்ச்சி கொண்ட துறை­களில் பெண்­க­ளுக்கு அதி­க­மான சிறந்த வாய்ப்­பு­களை வழங்­கு­வ­தன் மூலம் வர்த்­த­கங்­கள் போட்­டித்­தன்­மை­யு­டன் விளங்­கும், பொரு­ளி­ய­லும் பலம் பெறும் என்­றார்.

தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­தின் 'தொழில்­நுட்­பத்­தில் சிங்­கப்­பூர் பெண்­கள் இயக்­கத்­துக்கு' சமூக பங்­கா­ளித்­துவ அமைப்­பு­கள் ஆத­ரவு அளிக்­கின்­றன. அதன் மூலம் அனைத்துப் பிரிவு பெண்களுக்கும் தொடர்­பு­க­ளைப் பலப்­ப­டுத்­திக்­கொள்­ளு­தல், மதி­யுரை வாய்ப்­பு­களை வழங்­கு­தல் மூலம் அவர்­களை தொழில்­நுட்­பத் துறை­யில் வாழ்க்­கைத் தொழி­லைத் தேர்வு செய்ய ஊக்கு­விக்­க­லாம் என்­றார் அமைச்­சர் சுன்.