காணாமல் போனவர் உடல் உபின் தீவுக்கு அருகில் கிடைத்தது

காணாமல் போனவர் உடல் உபின் தீவுக்கு அருகில் கிடைத்தது

1 mins read
703cf13b-591f-4e61-b2da-e7595c01f384
-

காண­வில்லை என்று புகா­ர­ளிக்­கப்­பட்ட 42 வயது ஆட­வ­ரின் உடல் உபின் தீவு கடற்­ப­கு­தி­யில் நேற்று காலை கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தீ­வின் தென்­மேற்குப் பகு­தி­யில் திங்­கட்­கி­ழமை முற்­ப­கல் 11.45 மணிக்கு மூழ்­கி­ய­தாக நம்­பப்­பட்ட அந்த ஆட­வர் பற்றி காவல்­து­றைக்­குத் தக­வல் அளிக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை திங்­கட்­கி­ழமை பிற்­ப­கல் 12.20 மணிக்­குத் தேடு­தல் நட­வ­டிக்­கை­யைத் தொடங்­கி­யது. ஏழு மணி­நேரம் கழித்­தும் உடலைக் கண்­டு­பி­டிக்­க­வில்லை என்­ப­தால் தேடு­தல் நட­வ­டிக்கை நிறுத்­தப்­பட்­டது.

பின்னர் நேற்று காலை பொதுமக்களில் ஒருவர் உடல் மிதந்துவருவதைப் பார்த்து காவல்துறையை அழைத்தார்.