சிங்கப்பூரில் பலர் கடந்த சில மாதங்களாக சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவரைப் பார்க்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 30% வரை அதிகரித்துள்ளது.
அதிகமானோர் பயணங்களை மேற்கொள்ள தொடங்கியிருப்பது இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, தங்கள் உடல் நலனில் காட்டும் அக்கறை குறைந்துவிடுவதால் எளிதில் சளிக்காய்ச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
இதுபற்றி கூறுகையில், ஹெல்த்வே மருத்துவக் குழுமத்தின் தலைவர் டாக்டர் பிலிப் கோ, "2022 டிசம்பர் முதல் சளிக்காய்ச்சலுக்காக மருத்துவரை நாடும் நோயாளிகளின் விகிதம் 20% முதல் 30% வரை கூடியுள்ளது.
"ஒருவருக்கு உடல்நலமில்லாமல் இருந்தும் அவர் பள்ளிக்கோ வேலைக்கோ செல்லும்போது அவர் பலருக்கு தன்னிடம் உள்ள நோய்க் கிருமிகளைப் பரப்புகிறார். அதனால் மேலும் பலர் நோய்வாய்ப்படுகின்றனர்," என்றார் அவர்.

