கிராப் பயணத்தின்போது உரையாடல்களை ஒலிப்பதிவு செய்யலாம்

கிராப் பயணத்தின்போது உரையாடல்களை ஒலிப்பதிவு செய்யலாம்

2 mins read
1d37df4e-2628-466c-9851-4987119d2b88
-

கிராப் நிறு­வ­னத்­தின் ஓட்­டு­நர்-பங்­கா­ளி­களும் பய­ணி­களும் பய­ணத்­தின்­போது இடம்­பெ­றும் தங்­கள் உரை­யா­டல்­களை ஒலிப்­பதிவு செய்ய வழிவகுக்­கும் புதிய பாது­காப்பு அம்­சம் அறி­மு­கப்­படுத்­தப்­பட்­டுள்­ளது.

இம்­மா­தம் 21ஆம் தேதி தொடங்­கும் புதிய திட்­டம் படிப்­படி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று கிராப் சிங்­கப்­பூர் நிறு­வ­னம் நேற்று தெரி­வித்­தது.

'ஆடி­யோ­பு­ரோ­டெக்ட்' எனும் பய­ணி­களும் ஓட்­டு­நர்­களும் தங்­கள் திறன்­பே­சி­களில் பதி­வி­றக்­கம் செய்­யப்­பட்ட கிராப் செயலி மூலம் இரு­த­ரப்­பி­ன­ரின் சம்­ம­தத்­து­டன் தங்­கள் உரை­யா­டல்­களை ஒலிப்­ப­திவு செய்­து­கொள்­ள­லாம் என்­றும் கிராப் தனது செய்­தி­ய­றிக்­கை­யில் கூறி­யது.

அந்த வகை­யில் ஓட்­டு­ந­ரும் பய­ணி­யும் தங்­கள் செய­லி­யில் 'அக்­க­வுண்ட் சேஃப்டி' பகு­தி­யில் உரை­யா­டலை ஒலிப்­ப­திவு செய்ய அனு­மதி அளிக்க வேண்­டும்.

கிராப்­ஷேர், கிராப்­ஹிட்ச் தவிர கிராப் பய­ணங்­கள் அனைத்­தி­லும் இந்த வச­தி­யைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம்.

உரை­யா­டல் ஒலிப்­ப­தி­வாகி கொண்­டி­ருக்­கும்­போது, பய­ணி­யின் கைப்­பே­சி­யில் அழைப்பு வந்­தால், ஒலிப்­ப­திவு நின்­று­விடும். அழைப்பு முடிந்­த­வு­டன் ஒலிப்­ப­திவு தொட­ரும். ஆனால், ஒலிப்­ப­திவு ஓட்­டு­ந­ரின் செய­லி­யில் தொடர்ந்து இடம்­பெ­றும்.

'ஆடி­யோ­பு­ரோ­டெக்ட்' திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­வு­டன், பிறகு எல்லா பய­ணங்­க­ளின் உரை­யா­டல்­களும் இரு­த­ரப்­பின் ஒப்­பு­த­லு­டன் ஒலிப்­ப­திவு செய்­யப்­படும்.

பய­னா­ளர்­க­ளின் தனி­யு­ரி­மை­யைப் பாது­காக்­கும் வகை­யில், ஒலிப்­ப­தி­வா­கும் ஒலிக் கோப்­பு­கள் அனைத்­தும் மறை­கு­றி­யாக்­கப்­பட்டு, ஐந்து நாள்­க­ளுக்கு கைப்­பே­சி­யில் சேமித்து வைக்­கப்­படும். பிரச்­சினை ஏதும் இல்லை என்­றால் ஐந்து நாள்­க­ளுக்­குப் பிறகு அவை தானாக அழிந்­து­வி­டும் என்று கிராப் விளக்­கி­யது.

"பதி­வான ஒலிக் கோப்­பு­களை பய­ணியோ ஓட்­டு­நரோ சுயமாக பயன்படுத்த முடியாது. தலை­யெடுக்­கும் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண, கிராப் நிறு­வ­னத்­தின் பாது­காப்­புக் குழு மட்­டும்­தான் அவ்­வாறு செய்ய முடி­யும்.

"உரை­யா­டல் பதி­வாகி ஐந்து நாள்­க­ளுக்­கும் பிரச்­சினை ஏதும் வந்­தால், ஒலிப்­ப­தி­வு­கள் கிராப்­பின் பாது­காக்­கப்­பட்ட சேவை­ய­கங்­களில் புல­னாய்­வுக்­காக சேமித்து வைக்­கப்­படும்," என்றும் கிராப் தெரிவித்தது.