செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
76fd8257-9c73-47ce-bba9-ca751bb4069e
-

மனிதர்கள் தாக்கப்பட்ட பிறகு, காகத்தின் கூடுகள் அகற்றப்பட்டன

சிராங்கூன் அவென்யூ 3ல் குடியிருப்பாளர்கள் பல சமயங்களில் காகங்களால் தாக்கப்பட்ட பிறகு அங்குள்ள அதன் கூடுகளை அகற்ற தேசிய பூங்காக் கழகம் மற்ற அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வரை அந்தப் பகுதியில் காகங் களால் குடியிருப்பாளர்கள் தாக்கப்பட்ட நான்கு சம்பவங்கள் பற்றி (படம்) தங்களிடம் புகாரளிக் கப்பட்டது என்று தேசிய பூங்காக் கழகத்தின் வனவிலங்கு மேலாண்மை, சமூகத்தைச் சென்றடைதல் பிரிவின் இயக்குநர் ஹாவ் சூன் பெங் தெரிவித்தார்.

காகங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கைகளைக் கழகம் தொடங்கிவிட்டது என்று குறிப்பிட்ட திரு ஹாவ், காகங்களைப் பொறி வைத்து பிடிப்பதும் அந்தப் பகுதியில் அவற்றின் கூடுகளோ குஞ்சுகளோ உள்ளனவா என்பதைக் கண்டறிவதும் அந்த நடவடிக்கைகளில் அடங்கும் என்றும் விவரித்தார். பிடிக்கப்படும் காகங்கள் பின்னர் கருணைக் கொலை செய்யப்படும்.

"தன் குஞ்சுகளுக்கு ஏதேனும் ஆபத்து வருவதுபோல தெரிந்தால் காகங்கள் பொதுவில் மூர்க்கமாகி தாக்கத் தொடங்கிவிடும். காகங்களின் எண்ணிக்கை அதிகமாகாமல் இருக்கவும் அவை ஒன்றுகூடாமல் இருக்கவும் பொதுமக்கள் அவற்றுக்கு உணவளிக்கக் கூடாது. மேலும் உணவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்," என்றும் திரு ஹாவ் கூறினார்.

பெங்குவின்களுக்கு ஜூரோங் பறவைப் பூங்காவில் கண்புரை அறுவை சிகிச்சை

ஜூரோங் பறவைப் பூங்காவில் உள்ள ஆறு முதிய பெங்குவின் பறவைகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள் ளப்பட்டுள்ளது என்றும் அவை முழுமையாகக் குணமடைந்து உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆறு பெங்குவின்களில் மூன்று ராஜ பெங்குவின்களின் (படம்) வயது 20 ஆண்டு அல்லது அதற்கு மேல். மற்ற மூன்று ஹம்போல்ட் பெங்குவின்களின் வயது ஏழு முதல் 13 ஆண்டுகள் வரை.

ராஜ பெங்குவின்களின் கண்புரைகள் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட உள்விழி லென்ஸ்கள் பொருத்தப்பட்டன என்று மண்டாய் வனவிலங்குக் காப்பகம் நேற்று தெரிவித்தது.

"இத்தகைய அறுவை சிகிச்சை உலகில் பெங்குவின் களிடம் மேற்கொள்ளப்பட்ட முதலாவது அறுவை சிகிச்சையாகும். இந்த அறுவை சிகிச்சையால் அந்தப் பறவைகளின் கண் பார்வை மேம்பட்டு, அவற்றின் வாழ்க்கைத் தரம் மேம்படும்," என்றும் காப்பகம் கூறியது.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெங்குவின்கள், ஜூரோங் பறவைப் பூங்காவில் உள்ள இதர பெங்குவின் களுடன் சேர்க்கப்பட்டுள்ளன. பறவைகள் பின்னர் மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் உள்ள புதிய பறவைகள் மகிழ்வனத்துக்கு மாற்றப்படும்.

பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்த அரிய ஸ்லேட்டி மரங்கொத்திப் பறவை

பூமலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்சியளித்த அரிய வகை மரங்கொத்திப் பறவை ஒன்று சுமார் 40 ஆர்வலர்களை ஈர்த்தது. அங்கு தங்கள் திருமண உறுதி மொழிச் சடங்கை நடத்திய புதுமணத் தம்பதியும் அந்த அரிய வகை பறவையை ஆர்வத்துடன் படம்பிடித்தனர்.

வழுக்கைத் தலை, சாம்பல் நிற இறகுகள், 51 செண்டி மீட்டர் உயரம் கொண்ட அந்த மரங்கொத்திப் பறவையைப் 'பாதிக்கப்படக்கூடிய' வகை என்று இயற்கை பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியம் தெரிவித்து உள்ளது. உலகில் மிகப் பெரிய மரங்கொத்திப் பறவை யாகக் கருதப்படும் இந்த வகைப் பறவை சிங்கப்பூரில் நான்காவது முறையாகக் காட்சி தந்துள்ளது.