ஆசியானில் இந்திய முதலீடு, வர்த்தகம் பெருக வேண்டும்

ஆசியானில் இந்திய முதலீடு, வர்த்தகம் பெருக வேண்டும்

2 mins read
907f0456-c291-415f-ac22-33cf6a0b2d14
-

சிங்கப்பூர்-இந்தியா ஒத்துழைப்பு விரிவடையவும் அமைச்சர் கான் வலியுறுத்து

இந்­தியா பெரும் சந்­தை­யா­கத் திகழ்­கிறது. அது ஆசி­யா­னு­டன் சேர்ந்து செயல்­பட்­டால் அந்­தச் சந்தை இரு மடங்கு பெரியதாகும்.

ஆகை­யால், இந்­திய நிறு­வனங்­கள் ஆசி­யான் நாடு­களில் தொழிலை விரி­வு­ப­டுத்­து­வது பற்றி தீவி­ர­மா­கப் பரி­சீ­லிக்க வேண்­டும் என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் அறை­கூ­வல் விடுத்தார்.

அதே­போல, இந்­தி­யா­வும் சிங்­கப்­பூ­ரும் பல துறை­களில் பங்­கா­ளி­க­ளா­கத் திகழ்­கின்­றன.

இந்­தப் பங்­கா­ளித்­துவ உறவை மேலும் ஆழ­மாக்க வாய்ப்­பு­கள் இருக்­கின்­றன என்­றும் அவர் தெரி­வித்­தார்.

இந்­தியப் பய­ணம் மேற்­கொண்டுள்ள திரு கான், புது­டெல்­லி­யில் இந்­தியத் தொழில்­துறை கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளித்­துவ உச்ச மாநாட்­டில் உரை­யாற்­றி­னார்.

இந்­தியா இரண்டு ஆஸ்­கர் விரு­து­களை வென்றுள்ளது. வர்த்தக, முதலீட்டுப் பங்­காளித்­துவ ஆஸ்­கர் விருது என்ற மூன்றாவது விரு­தை­யும் வெல்ல ஏரா­ள­மான பணி­க­ளை அது செய்ய வேண்­டும் என்று அமைச்­சர் கான் தெரி­வித்­தார்.

'நாட்டு நாட்டு' தெலுங்கு பாட்­டிற்­கும் 'த எலி­ஃபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணக் குறும்­ப­டத்­திற்­கும் ஆஸ்­கர் விருது கிடைத்­தி­ருப்­பதை அவர் சுட்­டி­னார்.

சிங்­கப்­பூர்-இந்­தியா பங்­கா­ளித்­துவ உற­வைப் பற்றி ஆழ­மா­கச் சிந்­திக்­கும்­படி அனைத்துத் தரப்­பு­களை­யும் வலி­யு­றுத்திய அமைச்சர், குறிப்­பாக இந்­திய நிறு­வ­னங்­கள் சிங்­கப்­பூ­ரி­லும் தென்­கி­ழக்கு ஆசி­யா­வி­லும் அதற்கு அப்­பா­லும் தொழில்­களை விரி­வு­ப­டுத்த எப்படி உதவமுடி­யும் என்­பது பற்றி சிந்­திக்­கும்­படி அவர் கேட்டுக்­கொண்­டார்.

ஆசி­யான் அமைப்­பின் வளர்ச்சி வாய்ப்­பு­களை எடுத்துக் கூறி விளக்­கிய அமைச்­சர், ஆசி­யான் பொரு­ளி­யல் 2021ல் US$3.3 டிரில்­லி­யன் மதிப்­பு­டன் உல­கின் ஐந்­தா­வது ஆகப் பெரிய பொரு­ளி­ய­லா­கத் திகழ்ந்­த­தைச் சுட்­டி­னார். இது மொத்­த­மா­கப் பார்க்­கை­யில், இந்­தி­யா­வுக்­குச் சம­மா­னது என்­றார் அவர்.

ஆசி­யா­னில் உள்ள US$175 பில்­லி­யன் மதிப்­புள்ள வாய்ப்­பு­களில் இந்­திய முத­லீட்­டா­ளர்­கள் US$1.9 பில்­லி­யன் மதிப்­புள்ள முத­லீ­டு­களை மட்­டுமே பயன்­ப­டுத்­திக் கொண்டு இருக்­கி­றார்­கள்.

இந்­தியா 2050வது ஆண்டு வாக்­கில் US$30 டிரில்­லி­யன் டாலர் மதிப்­புள்ள பொரு­ளி­ய­லா­கத் திகழ வேண்­டும் என்று இலக்கு நிர்­ண­யித்து இருக்­கிறது.

இதனைக் கருத்­தில்கொண்டு இந்­திய நிறு­வ­னங்­க­ளின் ஆசி­யான் முத­லீ­டு­கள் இந்தப் பத்தாண்டு முடி­வில் 10 மடங்கு அதி­க­ரித்து US$20 பில்­லி­ய­னா­கப் பெருக வேண்­டும் என்று அமைச்­சர் அறை­கூ­வல் விடுத்­தார்.

ஆசி­யா­னுக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடைப்­பட்ட பண்­டக வர்த்­த­கம் ஆசி­யா­னின் மொத்த வர்த்­த­கத்­தில் வெறும் 2% ஆக மட்­டும்­தான் இருக்­கிறது என்­பதைச் சுட்­டிய அமைச்­சர், பங்­கா­ளித்­துவ உற­வு­களை ஏற்­ப­டுத்­திக்கொண்டு ஆசி­யா­னின் வாய்ப்­பு­களை இந்­திய நிறு­வ­னங்­கள் பயன்­ப­டுத்­திக் கொண்டு இருந்­தால் வர்த்­த­கம் எந்த அள­வுக்கு வளர்ந்­தி­ருக்­கும் என்­ப­தைச் சிந்­தித்துப் பார்க்­கும்­படி கேட்­டுக்­கொண்­டார்.

ஆசி­யா­னு­டன் கூடிய தன்­வர்த்­த­கத்தை இந்­தியா இந்த பத்தாண்டு முடி­வில் 10 மடங்கு அதி­க­ரிக்க வேண்­டும் என்பது தனது அடுத்த சவால் என்றாரவர்.

சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடைப்­பட்ட உற­வு­க­ளைப் பற்றி விளக்­கிய அமைச்­சர், இந்த இரு நாடு­களும் கரி­மக் கழி­வற்ற எரி­பொ­ருள், பொருள், சேவை விநி­யோ­கக் கட்­ட­மைப்பு மீள்­திறன் ஆகிய துறை­க­ளி­லும் இதர துறை­க­ளி­லும் ஒத்­து­ழைப்­புக்­கான வாய்ப்­பு­க­ளைக் கண்­ட­றி­ய­லாம் என்று தெரிவித்தார்.