வாடகை மோசடி: 13 பேர் கைது

வாடகை மோசடி: 13 பேர் கைது

1 mins read
b8a3bf3a-5ca4-4071-8b8f-ed3191a9413e
-

சிங்­கப்­பூர் காவல்­து­றை­யின் மோசடி ஒழிப்பு தள­பத்­தி­யம் இந்த மாதம் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நாடு முழு­வ­தும் அமலாக்க நட­வ­டிக்­கை­களை எடுத்­தது.

அதில், 18 வயது முதல் 56 வயது வரை­யி­லான ஒன்­பது ஆட­வர்­களும் நான்கு மாதர்­களும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­கள் அண்­மை­யில் இடம்­பெற்ற பல வாடகை மோசடி விவ­கா­ரங்­களில் சம்­பந்­தப்­பட்டு இருக்­கி­றார்­கள் என்று அதி­கா­ரி­கள் சந்­தே­கிக்­கி­றார்­கள்.

காவல்­து­றை­யின் புலன்­விசாரணை­களில் இதர மூன்று மாதர்­களும் உதவி வரு­கி­றார்­கள்.

இந்த 16 பேரும் வாடகை மோச­டி­கள் மூலம் கிடைத்த சட்­ட­வி­ரோத தொகையை வேண்டு­மென்றே தங்­கள் வங்கிக் கணக்கு­களில் பெற்­றி­ருக்­கி­றார்­கள் என்­பது முதல்­கட்ட விசா­ரணை மூலம் தெரி­ய­வந்து இருப்­ப­தாக காவல்­துறை அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

மொத்­தம் 480 வாடகை மோசடி விவ­கா­ரங்­கள் தொடர்­பில் $1.3 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட தொகை வங்­கிக் கணக்­கு­களில் இருந்து எடுத்­துக்­கொள்­ளப்­பட்டு இருப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.