தனியார், கூட்டுரிமை வீடுகள்: அரசாங்க இடம் விற்பனைக்கு

தனியார், கூட்டுரிமை வீடுகள்: அரசாங்க இடம் விற்பனைக்கு

1 mins read
017a2f79-b923-4d73-99ec-a74a9fd0f87b
-

அர­சாங்க நில விற்­பனை செயல்­திட்­டத்­தின் கீழ் இரண்டு இடங்­கள் தனி­யார் வீடு­க­ளுக்­கும் கூட்­டு­ரிமை வீடு­க­ளுக்­கும் விற்­ப­னைக்குக் கொடுக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

இத்­த­கைய ஏழு இடங்­கள் விற்­ப­னைக்கு விடப்­படும் என்று அர­சாங்­கம் ஏற்­கெ­னவே உறு­திப்­ப­டுத்தி இருக்­கிறது.

அவற்­றில் முத­லா­வ­தாக இரண்டு இடங்­கள் இந்த ஆண்­டின் முதல் பாதிக்­கான அர­சின் நில விற்­பனைத் திட்­டத்­தின்­கீழ் விற்­ப­னைக்குக் கொடுக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

வட்­டி­வி­கி­தம் அதி­க­மாக இருக்­கிறது. பற்­று­மான, கட்­டு­மானச் செல­வு­கள் கூடி இருக்­கின்­றன.

இவற்­றைக் கருத்­தில்­கொண்டு அந்த இடங்­களில் வீடு­களைக் கட்டி விற்­கும் நிறு­வ­னங்­கள் எச்­ச­ரிக்­கை­யு­டன் ஒப்­பந்­தப் புள்­ளி­க­ளைத் தாக்­கல் செய்­யும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

ஜாலான் தெம்­பு­சு­வில் உள்ள நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யத்­திற்­குச் சொந்­த­மான ஓர் இடத்­தி­லும் தெம்­ப­னிஸ் ஸ்தி­ரீட் 62ல் உள்ள வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் எக்­ஸி­கி­யூட்­டிவ் வீடு­க­ளுக்­கான ஓரி­டத்­தி­லும் மொத்­த­மாக 1,540 புதிய தனி­யார் வீடு­களைக் கட்ட முடி­யும்.

இந்த ஆண்­டின் முதல் பாதிக்­கான அரசு நில விற்­பனைத் திட்­டத்­தின்­கீழ் 4,090 வீடு­கள் கட்­டப்­படும்.

சென்ற ஆண்டு பிற்­பா­தி­யில் 3,505 வீடு­க­ளுக்­கான இடங்­கள் விற்­கப்­பட்­டன.

இப்­போது விற்­ப­னைக்கு விடப்­பட்டு உள்ள இரண்டு இடங்­க­ளுக்­கான ஒப்­பந்­தப்­புள்­ளி­களை ஜூலை 18ஆம் தேதி நண்­ப­கல் 12 மணிக்­குள் தாக்­கல் செய்ய வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.