கார் பேட்டை முத்திரை கேட்டு வழக்குத் தொடுத்து தோல்வி

கார் பேட்டை முத்திரை கேட்டு வழக்குத் தொடுத்து தோல்வி

1 mins read
536bee77-0da9-4bfb-80db-141aac367393
-

தனக்கு கார் பேட்டை முத்­திரை கொடுக்­கப்­ப­ட­வில்லை என்று சொல்லி தன் கூட்­டு­ரிமை புளோக்­கின் நிர்­வாக அமைப்பை நீதி­மன்­றத்­திற்கு இழுத்த ஒரு­வர் வழக்­கில் தோல்வி அடைந்­தார்.

இந்த வழக்கை விசா­ரித்த நீதி­பதி, இது நீதி­மன்ற நடை­முறை­யைத் தவ­றா­கப் பயன்­படுத்­திய ஒரு செயல் என்று தீர்ப்­பில் குறிப்­பிட்­டார்.

மனோ­கர் கே.டி. நன்­வானி என்­ப­வர், போர்ட் கார்­டன்ஸ் கூட்­டு­ரிமை வீட்­டில் 2022ல் குடி­யே­றி­னார்.

போர்ட் ரோடு குடி­யி­ருப்­புப் பேட்­டைக்கு உட்­பட்ட பதிவு பெற்ற உரி­மை­யாளரின் முக­வரியைக் காட்­டும் வாகன விவர ஆவ­ணத்­தைக் கொண்டுள்ள குடி­யி­ருப்­பா­ளர்­களுக்கு மட்டுமே கார் பேட்டை முத்­திரை கொடுக்­கப்­படும் என்­பது அந்தக் கூட்­டு­ரிமை நிர்­வா­கத்­தின் துணைச் சட்­டம்.

இதை எதிர்த்து அவர் வழக்­குத் தொடுத்து தோற்­றார்.

அந்­தத் துணைச் சட்­டம், கட்டட நிர்­வா­கம், பாட்­டா­ நிர்­வா­கச் சட்­டத்­திற்கு முர­ணா­னது என்­ப­தால் அது செல்­லாது என்­றும் அந்­தத் துணைச் சட்­டம்­ பா­ர­பட்­ச­மா­னது என்­றும் வழக்­கில் அவர் கோரி­னார்.