சிங்கப்பூர் முதலீட்டாளர்களுக்கு அதிபர் விடோடோ அழைப்பு

3 mins read
b6cbf877-0827-41c3-968b-1bd7ddff6574
-

ஆசி­யா­வின் ஆகப்­பெ­ரிய தீவான போர்­னி­யோ­வில் புதி­தாக உரு­வாகி வரும் தலை­ந­க­ரில் முதல் தரத்­தி­லான மருத்­து­வ­ம­னை­

க­ளை­யும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளை­யும் கட்ட இந்­தோ­னீ­சியா திட்­ட­மி­டு­கிறது என்றும் இதன்­மூ­லம் சிங்­கப்­பூர் முத­லீட்­டா­ளர்­கள் தமது நாட்­டில் பங்­கா­ளித்­து­வத்தை மேம்­ப­டுத்­த­லாம் என்­றும் இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ தெரி­வித்துள்­ளார்.

திரு விடோ­டோ­வும் சிங்­கப் பூர் பிர­த­மர் திரு லீ சியன் லூங்­கும் இன்று 'தலை­வர்­க­ளின் ஓய்­வுத்­த­ளம்' என்­னும் சந்திப்பில் பங்கேற்க உள்ள நிலை­யில் 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­

தா­ளி­டம் அவர் இத்­த­க­வ­லைத் தெரி­வித்­தார். நுசந்­தாரா என்­னும் பெய­ரி­லான பெருந்­திட்­டத்­தின் விவ­ரங்­களை அவர் அப்­போது வெளி­யிட்­டார்.

அதிக மக்­கள்­தொ­கை­யும் நெருக்­க­டி­யும் மிகுந்த நக­ரி­ல்­இருந்து விவே­க­மா­ன­தா­க­வும் நீடித்து நிலைக்­கக்­கூ­டி­ய­தா­க­வும் உள்ள நக­ராக தலை­ந­கர் இருப்­பது சிறந்­தது என்ற முடி­வால் ஜகார்த்­தா­வி­லி­ருந்து தலை­ந­கர் மாற்­றப்­ப­டு­வ­தாக திரு விடோடோ கூறி­னார்.

2024ஆம் ஆண்டு முதல் அமைச்­சு­களும் அர­சாங்க நிறு­

வ­னங்­களும் படிப்­ப­டி­யாக புதிய தலை­ந­க­ருக்கு மாறும் என்­றார் அவர். சிங்­கப்­பூ­ரைப் பற்­றிக் குறிப்­பிட்ட திரு விடோடோ, இந்­தோ­னீ­சி­யா­வின் மிக முக்­கி­ய­மான பங்­காளி நாடு என்­றார்.

நுசந்­தா­ரா­வில் முத­லீடு செய்­வ­தன் மீதான கவ­னமே இரு நாடு­க­ளி­ட­மும் இருக்­கும் என்று தாம் நம்­பு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

2,561 சதுர கிலோ­மீட்­டர் பரப்­ப­ள­வில், அதா­வது சிங்­கப்­பூ­ரைக் காட்­டி­லும் மூன்று மடங்கு உள்ள நிலப்­ப­ரப்­பில் செயல்­ப­டுத்­தப்­பட உள்ள திட்­டத்­திற்­கான செலவு 466 டிரில்­லி­யன் ரூப்­பியா (S$41 பில்­லி­யன்) என்று மதிப்­

பி­டப்­பட்டு உள்­ள­தா­கக் கூறிய அதி­பர் விடோடோ, செல­வில் 20 விழுக்­காட்டை அர­சாங்­க­மும் எஞ்­சிய தொகையை தனி­யார் துறை­யும் வழங்­கும் என்­றார்.

"உயர்தரத்­தி­லான ஒன்­பது மருத்­து­வ­ம­னை­களும் ஏழு பல்­

க­லைக்­க­ழ­கங்­களும் இந்­தத் திட்­டத்­தின்­கீழ் கட்­டப்­படும். சிங்­கப்­பூ­ரில் உள்ள மவுண்ட் எலி­ச­பெத் மற்­றும் கிள­னெ­கிள்ஸ் மருத்­து­வ­ம­னை­க­ளைப் போன்­றும் சிங்­கப்­பூ­ரில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளைப் போன்­றும் அவை அமைக்­கப்­படும்," என்று கூறிய அவர், இந்­தோ­னீ­சி­யா­வின் பொரு­ளி­யல் தற்­போது நல்ல நிலை­யில் இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

இன்று சிங்­கப்­பூ­ரில் ஓய்­வுத்­

த­ளச் சந்­திப்­பில் பங்­கேற்­கும் பிர­தமர் லீ சியன் லூங்­கும் இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோ­டோ­வும் கடந்த சந்­திப்­பின்­போது இரு­நா­டு­க­ளுக்­கும் இடை­யில் கையெ­ழுத்­தான மூன்று வர­லாற்­று­பூர்வ உடன்­

பா­டு­கள் பற்றி கலந்து ஆலோ­சிப்­பர்.

வான்­வெளி நிர்­வா­கம், தற்­காப்­பில் ஒத்­து­ழைப்பு மற்­றும் தப்­பி­யோ­டி­ய­வர்­களை நாடு­க­டத்­து­தல் ஆகி­ய­வற்­றின் மீதான உடன்­பா­டு­கள் அவை.

இதற்கு முன்­னர், 2022 ஜன­வரி மாதம் பிந்­தா­னில் திரு லீயும் திரு விடோ­டோ­வும் சந்­தித்­த­போது மூன்று உடன்­ப­டிக்­கை­க­ளி­லும் இரு­நா­டு­கள் கையெ­ழுத்­தி­டு­வ­தைப் பார்­வை­யிட்­ட­னர். அந்த உடன்­பா­டு­

க­ளுக்கு இன்­றைய சந்­திப்­பில் இரு தலை­வர்­களும் ஒப்­பு­தல் வழங்­கு­வர் என்று சிங்­கப்­பூர் பிர­த­மர் அலு­வ­ல­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

மேலும், பொரு­ளி­யல், சமூக-கலா­சா­ரம் மற்­றும் பாது­காப்பு அம்­சங்­க­ளுக்கு இடை­யி­லான இரு­த­ரப்பு பங்­கா­ளித்­து­வத்தை வலுப்­ப­டுத்­து­வது தொடர்­பா­க­வும் அவர்­கள் ஆலோ­சிப்­பர்.

விரி­வாக்­கப்­பட்ட கட்­ட­மைப்­பின்­கீழ் ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட இந்த மூன்று உடன்­பா­டு­களும் இரு நாடு­க­ளின் நாடா­ளு­மன்­றத்­தின் ஒப்­பு­த­லைப் பெறும் என்று இதற்கு முன்­னர் கூறப்­பட்­டது.

இருப்­பி­னும், விமா­னத் தக­வல் வட்­டார உடன்­ப­டிக்­கை­யின் கீழான ஏற்­பா­டு­க­ளுக்கு அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைப்­பின் அங்­கீ­கா­ரத்தை சிங்­கப்­பூ­ரும் இந்­தோ­னீ­சி­யா­வும் இணைந்து பெற­வேண்டி உள்­ளது.

இந்த அங்­கீ­கா­ரம் கிடைத்­தால்­தான் மூன்று உடன்­ப­டிக்­கை­களும் ஒரே­நே­ரத்­தில் இரு­த­ரப்­பும் இணக்­கம் தெரி­வித்த நாளில் நடப்­புக்கு வரும்.

இந்தோனீசியாவின் புதிய தலைநகரில் உயர்தர மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள்