சென்ற மாதம் 9.9% அதிகம் விற்பனையான புதிய தனியார் வீடுகள்

2 mins read
af22092e-4529-4709-9644-42e614ac0467
பிப்­ர­வரி மாதம் 432 புதிய தனி­யார் வீடு­கள் விற்­கப்­பட்­ட­தாக நேற்று வெளி­யி­டப்­பட்ட நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யத்­தின் தர­வு­கள் தெரி­வித்­தன. படம்: பிசினஸ் டைம்ஸ் -

புதி­தா­கக் கட்­டப்­பட்ட தனி­யார் வீடு­க­ளின் விற்­பனை கடந்த மாதம் 9.9 விழுக்காடு அதி­க­ரித்­த­தாக சொத்­துச் சந்­தைப் பகுப்­பாய்­வா­ளர்­கள் கூறியுள்ளனர்.

குறிப்­பாக, முதன்மை மத்­திய வட்­டா­ரத்­தில் தனி­யார் வீடு­க­ளின் விற்­பனை அதி­க­மா­கக் காணப்­பட்­டது. இருப்­பி­னும் ஆண்டு அடிப்­ப­டை­யில், விற்­பனை ஆன வீடு­க­ளின் எண்­ணிக்கை குறைவு­ தான்.

பிப்­ர­வரி மாதம் 432 புதிய தனி­யார் வீடு­கள் விற்­கப்­பட்­ட­தாக நேற்று வெளி­யி­டப்­பட்ட நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யத்­தின் தர­வு­கள் தெரி­வித்­தன. இந்த எண்­ணிக்­கை­யில் எக்ச­கி­யூட்­டிவ் கொண்­டோ­மி­னிய வீடு­கள் சேர்க்­கப்­ப­ட­வில்லை.

மேலும் விற்­பனை ஆன வீடு­க­ளின் எண்­ணிக்கை ஜன­வரி மாதத்­தைக் காட்­டி­லும் 9.9 விழுக்­காடு அதி­கம். அந்த மாதத்­தில் 393 புதிய தனி­யார் வீடு­கள் விற்­பனை ஆயின.

எக்சகி­யூட்­டிவ் கொண்­டோ­

மி­னிய வீடு­க­ளை­யும் சேர்த்­தால் பிப்­ர­வ­ரி­யில் விற்­பனை ஆன தனி­யார் வீடு­க­ளின் எண்­ணிக்கை 470. ஜன­வரி மாதத்­தைக் காட்­டி­லும் இது குறைவு.

அந்த மாதம் 550 தனி­யார் வீடு­கள் விற்­பனை ஆயின. அதே­போல 2022 பிப்­ர­வ­ரி­யில் இந்த எண்­ணிக்கை 574ஆக பதி­வா­னது.

பிப்­ர­வரி மாதத்­தின் மொத்த பரி­வர்த்­த­னை­யில் 51.4 விழுக்­காடு முதன்மை மத்­திய வட்­டா­ரத்­தில் நிகழ்ந்­தவை. அந்த வட்­டா­ரத்­தில் 222 வீடு­கள் விற்­பனை ஆயின.

ஜன­வரி மாதம் இந்த எண்­ணிக்கை 158 ஆகப் பதி­வாகி இருந்­தது.

அதிக மதிப்­புள்ள சொத்­து­

க­ளுக்­கான முத்­தி­ரைக் கட்­ட­ணம் உயர்த்­தப்­பட்ட நிலை­யி­லும் தனி­யார் வீட்டை வாங்­கும் போக்கு அதி­க­ரித்­ததாக பகுப்­பாய்­வா­ளர்­கள் கூறி­னர்.

ஆண்டு அடிப்­ப­டை­யில் பிப்­ர­வரி மாதம் விற்­கப்­பட்ட வீடு­

க­ளின் எண்­ணிக்கை 20.3 விழுக்­காடு குறைவு.

2022 பிப்­ர­வ­ரி­யில் 542 புதிய தனி­யார் வீடு­கள் விற்­பனை செய்­யப்­பட்­டன.

விற்­ப­னைக்கு விடப்­பட்ட வீடு­க­ளின் எண்­ணிக்­கை குறை­வாக இருந்த நிலை­யி­லும் பிப்­ர­வரி மாதம் அதி­க­மான புதிய வீடு­கள் விற்­பனை ஆன­தாக ஆணை­யத்­தின் தர­வு­கள் தெரி­வித்­தன.

ஜன­வரி மாதம் 410 வீடு­க­ளுக்­கான விற்­பனை தொடங்­கப்­பட்ட நிலை­யில் கடந்த மாதம் அந்த விகி­தம் 2.2 விழுக்­காடு குறைந்­தது.