தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்னிலக்கத்தை ஊக்குவிக்கும் இயக்கத்திற்கு ஐநா விருது

2 mins read
ef179088-aed4-40f4-887d-231e68a44478
வாழ்க்­கைக்­கான மின்­னி­லக்க இயக்­கம், 'அனைத்­து­ல­கத் தொலைத்­தொ­டர்பு ஒன்­றி­யத்தை மேம்­ப­டுத்­து­வ­தில் அர­சாங்­கங்க­ளுக்­கும் எல்லா அமைப்­பு­க­ளுக்­கும் உள்ள பங்கு' என்­னும் பிரி­வில் இந்த விரு­துக்­குத் தகு­தி­பெற்­ற­தாக ஆணை­யத்­தின் செய்­திக்­கு­றிப்பு தெரி­விக்­கிறது. படம்: தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம் -

தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­தின் வாழ்க்­கைக்­கான மின்­னி­லக்­கம் என்­னும் இயக்­கம் ஐக்­கிய நாட்டு அமைப்பு முக­வை­யின் விரு­தைப் பெற்­றுள்­ளது.

ஐநா­வின்கீழ் இயங்­கும் அனைத்­து­ல­கத் தொலைத்­ தொ­டர்பு ஒன்­றி­யம் ஏற்­பாடு செய்த தக­வல் சமூ­கம் மீதான உலக உச்­ச­நி­லைக் கூட்­டத்­தில் இந்த இயக்­கம் தலை­சி­றந்த திட்­டம் என்­னும் விரு­துக்­குத் தேர்வு செய்­யப்­பட்­டது.

வாழ்க்­கைக்­கான மின்­னி­லக்க இயக்­கம், 'அனைத்­து­ல­கத் தொலைத்­தொ­டர்பு ஒன்­றி­யத்தை மேம்­ப­டுத்­து­வ­தில் அர­சாங்­கங்க­ளுக்­கும் எல்லா அமைப்­பு­க­ளுக்­கும் உள்ள பங்கு' என்­னும் பிரி­வில் இந்த விரு­துக்­குத் தகு­தி­பெற்­ற­தாக ஆணை­யத்­தின் செய்­திக்­கு­றிப்பு தெரி­விக்­கிறது.

இதே­போல 18 பிரி­வு­களை உள்­ள­டக்­கிய தேர்ந்­தெ­டுப்­புக்கு உல­கம் முழு­வ­தும் இருந்து 900 திட்­டங்­கள் பரிந்­து­ரைக்­கப்­பட்டு இருந்­தன.அவற்­றில் சிறந்­த­வற்­றைத் தேர்வு செய்­வ­தற்­கான வாக்­கெ­டுப்­பில் 1.5 மில்­லி­யன் பேர் கலந்து­கொண்­ட­னர்.

அத்­து­டன், நிபு­ணர்­க­ளின் மறு­ஆய்­வுக்­கும் அவை உட்­ப­டுத்­தப்­பட்டு இறு­தித் தேர்ந்­தெ­டுப்பு நடை­பெற்­றது.வாழ்க்­கைக்­கான மின்­னி­லக்க இயக்­கம் கடந்த 2021 பிப்­ர­வரி 8ஆம் தேதி அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பால் தொடங்கி வைக்­கப்­பட்­டது.

பொதுத் துறை, தனி­யார் துறை உள்­ளிட்ட சமூ­கத்­தின் எல்­லாப் பிரி­வு­க­ளி­லும் உள்ள சிங்­கப்­பூ­ரர்­கள் வாழ்­நாள் முழு­வ­தும் மின்­னி­லக்­கத்­தைத் தழு­வ­வும் மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பம் வழி­யாக அவர்­க­ளது வாழ்வை வளப்­ப­டுத்­த­வும் ஊக்­கப்­ப­டுத்­து­வதை நோக்­க­மா­கக் கொண்­டது இந்த இயக்­கம்.

இது­வரை இந்த இயக்­கத்­தில் பங்­கேற்ற அமைப்­பு­க­ளின் எண்­ணிக்கை 130க்கும் மேல் அதி­க­ரித்­த­தோடு இயக்­கம் முன்­னின்று நடத்­திய திட்­டங்­க­ளின் எண்­ணிக்கை 140க்கும் மேல்.

இந்த ஏற்­பா­டு­க­ளால் இளை­யர், மூத்­தோர், குறைந்த வரு­மா­னத்­தி­னர், குடும்­பங்­கள், பெண்­கள் மற்­றும் உடற்­கு­றை­யுள்­ளோர் என பல்­வேறு தரப்­பி­ன­ரை­யும் உள்­ள­டக்­கிய 270,000 சிங்­கப்­பூ­ரர்­கள் பல­ன­டைந்­துள்­ள­னர்.