மலேசிய நடிகர் தாக்கப்பட்டது குறித்து மனைவி கலக்கம்

1 mins read
4a8100d8-ae6a-4fca-affe-ecd7e19a794e
-

மலே­சிய நடி­கர் கமால் அட்லி கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சிங்­கப்­பூ­ரில் தாக்­கப்­பட்­டது தொடர்­பான அதிர்ச்­சி­யில் இருந்து தம்­மால் இன்­னும் மீள­மு­டி­ய­வில்லை என்று அவ­ரது மனைவி உகாஷா சென்­ரோஸ் (படம்) கூறி­யி­ருக்­கி­றார்.

மலே­சிய நடி­கை­யான இவர், நேற்று முன்­தி­னம் டிக்­டாக் நேர­லை­யில் இவ்­வாறு கூறி­னார்.

தம்­மால் உண்­ணவோ உறங்­கவோ முடி­ய­வில்லை என்று கூறிய உகாஷா, அறி­மு­க­மற்­ற­வர்­களு­டன் படம் எடுக்­க தமக்கு பய­மாக இருப்­ப­தா­க­க் குறிப்­பிட்­டார்.

படுக்­கைக்­குச் செல்­லும்­போதெல்­லாம் தம் கண­வ­ரைத் தாக்­கி­ய­வ­ரின் நினைவு வரு­வதால் உறக்­கம் வர­வில்லை என்று உகாஷா சொன்­னார்.

சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை சிங்­கப்­பூர் எக்ஸ்­போ­வில் நடை­பெற்ற நிகழ்ச்­சிக்­குப் பிறகு, இரவு 9 மணி­ய­ள­வில் ரசி­கர்­க­ளு­டன் பேசிக்­கொண்­டி­ருந்த கமாலை ஆட­வர் ஒரு­வர் தடியால் தாக்­கி­யதாகக் கூறப்பட்டது.

இதில் காயமடைந்த கமால் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவருக்குத் தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தாக்கியதாகக் கூறப்படும் 33 வயது ஆடவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.