மருந்து மோசடி: மாது மீது குற்றச்சாட்டு

1 mins read
04b6a593-4867-4d56-b35c-3573ad8e276d
கேண்டி வோங் ஷின் டிங் எனும் அந்த 42 வயது மாது, மொத்தம் $4,112 மதிப்புடைய மருந்துகளை இவ்வாறு ஏமாற்றிப் பெற்றதாகக் கூறப்படுகிறது. படம்: பிக்ஸாபே -

மருத்துவரின் மருந்துப் பரிந்துரைச் சீட்டைப் போன்ற 40 போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடி செய்த மாது மீது நேற்று இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கேண்டி வோங் ஷின் டிங் எனும் அந்த 42 வயது மாது, மொத்தம் $4,112 மதிப்புடைய மருந்துகளை இவ்வாறு ஏமாற்றிப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவற்றில் பொதுவான பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்ட மருந்துகளும் அடங்கும். லிம் கிளினிக் அண்ட் சர்ஜரியில் 35 முறை அவர் இவ்வாறு ஏமாற்றியதாகவும் ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையிலும் மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனையிலும் இதேபோன்ற மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட அவருக்கு மன நலப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.