உலகின் ஆகச் சிறந்த விமான நிலையமாக 12வது முறை மகுடம் சூடிய சாங்கி

உல­கின் ஆகச் சிறந்த விமான நிலை­ய­மாக சாங்கி விமான நிலை­யம் மீண்­டும் அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

லண்­ட­னைத் தள­மா­கக் கொண்டு செயல்­படும் ‘ஸ்கை­டி­ரேக்ஸ்’ ஆய்வு நிறு­வ­னம் பயணி­க­ளி­டம் நடத்­திய கருத்­தாய்­வின் அடிப்­ப­டை­யில், 12வது முறை­யாக இந்த மகு­டத்தை சாங்கி விமான நிலை­யத்­திற்கு சூட்­டி­யி­ருக்­கிறது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லின்­போது 2021, 2022ஆம் ஆண்­டு­களில் இந்­தச் சிறப்பை இழக்க நேரிட்­டா­லும் இப்­போது மீண்­டும் அதை எட்­டி­யுள்­ளது சாங்கி விமான நிலை­யம்.

மேலும், ஆசி­யா­வின் ஆகச் சிறந்த விமான நிலை­யம், உல­கின் ஆகச் சிறந்த கேளிக்கை நட­வ­டிக்­கை­கள் கொண்ட விமான நிலை­யம், உல­கின் ஆகச் சிறந்த உண­வக வச­தி­கள் உள்ள விமான நிலை­யம் ஆகிய சிறப்­பு­க­ளை­யும் இம்­முறை சாங்கி விமான நிலை­யம் பெற்­றுள்­ளது.

ஆம்ஸ்­டர்­டா­மில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ‘2023 உலக விமான நிலைய விரு­து வழங்கும் விழா­வில்’ இந்த விரு­து­கள் அறி­விக்­கப்­பட்­டன.

உல­கின் ஆகச் சிறந்த விமான நிலை­யங்­கள் பட்­டி­ய­லில் கத்­தார் தலை­ந­கர் தோஹா­வில் உள்ள ஹமாத் அனைத்­து­லக விமான நிலை­யம் இரண்­டா­வது இடத்­தை­யும் ஜப்­பா­னி­யத் தலை­ந­கர் தோக்­கி­யோ­வில் உள்ள ஹனேடா விமான நிலை­யம் மூன்­றா­வது இடத்­தை­யும் பிடித்­துள்­ளன.

முன்­ன­தாக, 2013ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை தொடர்ந்து எட்டு ஆண்­டு­க­ளாக, உல­கின் ஆகச் சிறந்த விமான நிலை­யம் என்ற சிறப்பை சாங்கி பெற்­றது. நீண்­ட­கா­லம் இதைத் தக்­க­வைத்­துக்­கொண்ட பெரு­மை­யும் சாங்கி விமான நிலை­யத்­தைச் சாரும்.

கருத்­தாய்­வில் கலந்­து­கொண்ட பய­ணி­கள், பாது­காப்பு, குடி­நு­ழைவு நடை­முறை, கடை­கள் போன்­ற­வற்­றில் தாங்­கள் பெற்ற அனு­ப­வங்­க­ளின் அடிப்­ப­டை­யில் கருத்­து­ரைத்­த­னர்.

படம்: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!