இளையர்களிடையே வேலையின்மை விகிதம் 24 ஆண்டுகள் காணாத அளவு குறைந்தது

இளையர்களிடையே வேலையின்மை விகிதம் 24 ஆண்டுகள் காணாத அளவு குறைந்தது

1 mins read
588192c0-ec82-401c-820d-f2f5c57ff34f
சென்ற ஆண்டு, 15 வய­துக்­கும் 24 வய­துக்­கும் இடைப்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் ஆகி­யோ­ரி­டையே வேலை­யின்மை விகி­தம் 5.9 விழுக்­கா­டாக இருந்­தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் இளை­யர்­க­ளி­டையே சென்ற ஆண்டு வேலை­யின்மை விகி­தம் 24 ஆண்­டு­களில் ஆகக் குறை­வா­கப் பதி­வா­கி­யுள்­ளது. சில்­லறை விற்­பனை, உணவு, பானத் துறை­களில் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்­குப் பின்­னர் ஆட்­சேர்ப்பு மீண்­டும் அதி­க­ரித்­தி­ருப்­ப­தும் இதற்­குக் கார­ண­மா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

சென்ற ஆண்டு, 15 வய­துக்­கும் 24 வய­துக்­கும் இடைப்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் ஆகி­யோ­ரி­டையே வேலை­யின்மை விகி­தம் 5.9 விழுக்­கா­டாக இருந்­தது. 2021ஆம் ஆண்டு இந்த விகி­தம் 7.3 விழுக்­காடு. இதற்கு முன்­னர் 1997ஆம் ஆண்டு பதி­வான 4.3 விழுக்­காடு எனும் விகி­தத்­திற்­குப் பிறகு சென்ற ஆண்­டின் விகி­தம்­தான் ஆகக் குறை­வா­னது.

மனி­த­வள அமைச்சு நேற்று இந்­தத் தக­வல்­களை வெளி­யிட்­டது.

கிரு­மிப் பர­வல் தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்ட பிறகு, சில்­லறை விற்­பனை, உணவு, பானத் துறை போன்­ற­வற்­றில் பகு­தி­நேர அல்­லது தற்­கா­லிக வேலை­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மி­ருப்­பதை, இந்­தக் குறை­வான வேலை­யின்மை விகி­தம் பிர­தி­ப­லிப்­ப­தாக அமைச்சு கூறி­யது.

படித்­துக்­கொண்­டி­ருப்­போர், வேலைக்­கா­கப் பயிற்சி பெறு­வோர், இன்­னும் வேலை தேடத் தொடங்­கா­தோர் ஆகி­யோ­ரின் எண்­ணிக்கை கணக்­கில் எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இளம் ஊழி­யர்­களில் 40 விழுக்­காட்­டி­னர் தற்­கா­லிக வேலை­க­ளிலோ ஒப்­பந்த அடிப்­ப­டை­யி­லான வேலை­க­ளிலோ பணி­பு­ரி­வ­தாக சென்ற ஆண்­டுக்­கான வேலைச் சந்தை அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவர்­களில் பெரும்­பா­லோர் படித்­துக்­கொண்டே வேலை­பார்ப்­ப­வர்­கள்.

வேலை­பார்க்­கும் இளை­யர்­களில் 27 விழுக்­காட்­டி­னர் பள்ளி மாண­வர்­கள் அல்­லது விடு­மு­றை­யில் வேலை செய்­வோர் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.