சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பெரும்பாலான நாள்களில் பிற்பகலில் குறுகிய நேரத்திற்கு மழை பெய்யக்கூடும். மிதமானது முதல் கனத்த மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு நிலையம் முன்னுரைத்துள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு, வெப்பநிலை பெரும்பாலும் 24 டிகிரி செல்சியசுக்கும் 33 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும்.
சில நாள்களில் வெப்ப நிலை 34 டிகிரி செல்சியசை எட்டக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. அந்த நாள்களில் குறைவான காற்று வீசும். மேகமூட்டம் குறைவாக இருக்கும் எனக் கூறப்பட்டது.
இம்மாதத்தின் முதல் வாரத்தில் பெரும்பாலும் மழை பெய்தது. மூன்று நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாகப் பதிவானது.
மார்ச் இரண்டாவது வாரத்தில் மழை குறைந்தது. சிங்கப்பூரின் சில பகுதிகளில் மட்டுமே பிற்பகல் வேளைகளில் மழை பெய்தது.
இம்மாதம் 1ஆம் தேதி செங்காங் வட்டாரத்தில் 104.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த மாத முற்பகுதியில் பதிவான ஆக அதிக அன்றாட மழைப்பொழிவு அது.

