'அல்ஷைமர்' நோய்க்கு சிகிச்சை சாத்தியமாகலாம்: 'என்டியு' ஆய்வு

'அல்ஷைமர்' நோய்க்கு சிகிச்சை சாத்தியமாகலாம்: 'என்டியு' ஆய்வு

1 mins read
0b0d75fb-baf6-4815-b1e8-336f14dd86ae
புதிய கண்­டு­பி­டிப்­பால், இந்த நோய்க்­கான சிகிச்­சைக்­குப் புதிய மருந்­து­களை உரு­வாக்­கு­வது சாத்­தி­ய­மா­கும் என்று கரு­தப்­ப­டு­கிறது. படம்: நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் -

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழக (என்­டியு) ஆய்­வா­ளர்­கள் 12 பேர், மனித மூளை­யில் உள்ள எதிர்ப்பு ஆற்­ற­லுக்­கான உயி­ர­ணுக்­கள் எவ்­வாறு உட­லில் இருந்து நச்­சு­களை வெளி­யேற்­று­வ­தற்­கான ஆற்­றலை உரு­வாக்­கு­கின்­றன என்­ப­தைக் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

இவ்­வாறு நச்­சு­கள் உட­லில் இருந்து வெளி­யேற்­றப்­ப­டா­விட்டால் அவை உட­லில் சேர்ந்­து­கொண்டே வரும் நிலை­யில் 'அல்­ஷை­மர்' எனும் நினை­வாற்­றல் இழப்பு நோய்க்கு அவை வித்­தி­டக்­கூ­டும்.

புதிய கண்­டு­பி­டிப்­பால், இந்த நோய்க்­கான சிகிச்­சைக்­குப் புதிய மருந்­து­களை உரு­வாக்­கு­வது சாத்­தி­ய­மா­கும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

இது­வரை, 'அல்­ஷை­மர்' நோய்க்கு சிகிச்சை ஏதும் கண்டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

உல­க­ள­வில் மறதிநோயால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரில் 60 முதல் 70 விழுக்­காட்­டி­னர் 'அல்­ஷை­மர்' நோயா­ளி­கள் என்று உல­கச் சுகா­தார நிறு­வ­னம் கூறு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் கடந்த 2018ஆம் ஆண்டு, 82,000 பேருக்கு மறதி நோய்ப் பாதிப்பு இருந்­தது. இந்த எண்­ணிக்கை 2030ல் 152,000க்கு உய­ரக்­கூ­டும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர்­க­ளின் புதிய கண்­டு­பி­டிப்பு குறித்து அமெ­ரிக்­கா­வின் 'பிஎன்­ஏ­எஸ்' எனப்­படும் பல்­துறை அறி­வி­யல் சஞ்­சி­கை­யில் தக­வல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. சென்ற மாதம் 14ஆம் தேதி அந்­தத் தக­வல் வெளி­யா­னது.