துவாஸ் சோதனைச்சாவடி; நாள் முழுதும் ஒரே கட்டணம்

சிங்­கப்­பூர் அல்­லது மலே­சி­யா­ விலி­ருந்து துவாஸ் சோத­னைச் சாவடி வழி­யா­கச் செல்­வோ­ருக்கு உச்ச நேரத்­தில் வழங்­கப்­பட்ட சலுகை மீட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கிறது.

இந்­தப் புதிய நடை­முறை மார்ச் மாதத்­தி­லி­ருந்து நடப்­புக்கு வரு­கிறது.

இது பற்றி அறிக்கை ஒன்றை நேற்று வெளி­யிட்ட நிலப்­போக்­கு­ வ­ரத்து ஆணை­யம், தற்­போதை உச்­ச­நே­ரக் கட்­ட­ணம் நாள் முழு­வ­தும் நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக தெரி­வித்­தது.

மோட்­டார் சைக்­கிள் ஓட்­டி­க­ளுக்கு கட்­ட­ணத்­தி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­பட்­டுள்­ள­தில் மாற்­ற­மில்லை என்­றும் அது குறிப்­பிட்­டது.

அண்­மை­யில் மலே­சி­யா­வின் தஞ்­சோங் குபாங் சாலைக் கட்­ட­ணத்­தில் செய்­யப்­பட்ட மாற்­றத்­தைத் தொடர்ந்து அதற்கு ஈடான கட்­ட­ணத்தை வசூ­லிக்­கும் சிங்­கப்­பூ­ரின் நீண்­ட­காலக் கொள்­கை­யின்­படி இந்த மாற்­றம் இடம்­பெறு­வ­தாக ஆணை­யம் கூறி­யது.

2020 மார்ச் மாதத்­தி­லி­ருந்து கார், வேன், இல­கு­ரக, கன­ரக வாக­னங்­கள், டாக்சி, பேருந்­து­கள் உச்­ச­நேர (காலை 5.00-10.00, பிற்­ப­கல் 3.00- இரவு 11.00), உச்­ச­நே­ர­மல்­லாத (காலை 10.00 - பிற்­ப­கல் 3.00, இரவு 11.00 - காலை 5.00) கட்­ட­ணத்தை செலுத்த வேண்­டும்.

புதிய மாற்­றத்­தின்­படி கார் ஓட்­டு­ப­வர்­கள் நாள் முழு­வ­தும் $2.10 கட்­ட­ணம் செலுத்த வேண்­டும்.

கன­ரக சரக்கு வாக­னங்­ களுக்கு நாள் முழு­வ­தும் $11.30.

மலே­சி­யா­விற்­குள் நுழை­யும் அனைத்து வாக­ன­மோட்­டி­களும் தங்­க­ளு­டைய கட்­டண அட்­டை­யில் போது­மான பணம் இருப்­பதை உறுதி செய்ய வேண்­டும் என்­றும் ஆணை­யம் நினை­வூட்­டி­யது.

வெளி­நாட்­டில் பதிவு செய்த வாக­னங்­கள் சிங்­கப்­பூ­ரில் நுழை­வ­தற்கு நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தி­ட­மி­ருந்து வாகன நுழைவு அனு­மதி அட்டை, ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்ட மின் அஞ்­சலை வைத்­தி­ருக்க வேண்­டும். தகு­தி­வாய்ந்த ‘ஆட்­டோ­பாஸ்’ அட்­டை­யும் வைத்­தி­ருக்கவேண்­டும்.

வாகன நுழைவு அனு­ம­தி­யில்­லா­த­வர்­கள் ஆணை­யத்­தின் ‘OneMotoring’ இணை­யத்­த­ளம் வழி­யாக விண்­ணப்­பிக்­க­லாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!