மானபங்கம்; முன்னாள் யோகா பயிற்றுவிப்பாளருக்கு $4,000 அபராதம்

மானபங்கம்; முன்னாள் யோகா பயிற்றுவிப்பாளருக்கு $4,000 அபராதம்

1 mins read
14e3ca73-82cb-4e59-a229-0e3761c4d54b
மான­பங்­கம் தொடர்­பில் டிரஸ்ட் யோகா பயிற்­று­விப்­பா­ளர் ஒரு­வர் நீதி­மன்­றத்­தில் முன்னிலை­யா­வது இது இரண்­டா­வது முறை. படம்: பிக்ஸாபே -

யோகா கற்­றுக்­கொள்ள வந்த மாண­வியை மான­பங்­கப்­ப­டுத்­தி­ய­தற்­காக 'டிரஸ்ட் யோகா' நிறு­வ­னத்­தின் முன்­னாள் யோகா பயிற்­று­விப்­பா­ள­ருக்கு $4,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

2022 மே 22ஆம் தேதி நடந்த சம்­ப­வத்­தில் அவர் மாணவி­யின் பின்­பு­றத்­தைத் தட்­டி­னார் என்று சொல்­லப்பட்­டது.

இந்­திய நாட்­ட­வ­ரான குமார் அம்­ரிட், 29, தன் மீது சுமத்­தப்­பட்ட மான­பங்­கக் குற்­றச் சாட்டை ஒப்­புக்கொண்­டார்.

மான­பங்­கம் தொடர்­பில் டிரஸ்ட் யோகா பயிற்­று­விப்­பா­ளர் ஒரு­வர் நீதி­மன்­றத்­தில் முன்னிலை­யா­வது இது இரண்­டா­வது முறை.

மற்­றொரு இந்­திய நாட்­ட­ வரான ராஜ்­பால் சிங், 33, ஐந்து பெண்ணை மான­பங்­கம் செய்த குற்­றச்­சாட்டை ஏற்­றுக்கொள்­ளா­மல் விசா­ரணை கோரி­யி­ருக்­கி­றார். இந்த வழக்கு நிலு­வை­யில் உள்­ளது.

தற்­போ­தைய வழக்­கில் 2022 ஏப்­ர­லில் குமா­ரால் பாதிக்­கப்­பட்ட பெண், தெலுக் ஆயர் ஸ்தி­ரீட்டில் உள்ள டிரஸ்ட் யோகா­வில் தனிப்­பட்ட யோகா பயிற்சி வகுப்­புக்கு பதிவு செய்­தி­ருந்­தார்.

பின்­னர் திரு மனோஜ் என்­ப­வர் நடத்­திய மூன்று யோகா வகுப்­பில் அந்­தப் பெண் பங்­கேற்­றார்.

2022 மே 22ஆம் தேதி குறிப்­பிட்ட நேரத்­தில் மனோஜ் இல்­லா­த­தால் குமா­ரின் வகுப்­புக்கு அவர் சென்­றார்.

பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் அனு­ ம­தி­யின்றி அவ­ரது பின்­பு­றத்­தில் பயிற்­று­விப்­பா­ளர் கைவைத்து அழுத்­தி­னார்.

பாதிக்­கப்­பட்­ட­வர் படுத்­தி­ருந்தபோது பின்­பு­றத்தை அவர் அழுத்­திப்பிடித்­தார். குமார், அதி­கம் பேசா­மல் பெண்­ணின் ஒரு அசை­வி­லி­ருந்து மற்­றொரு அசை­வுக்கு கையால் தொட்டு மாறச்செய்­தார்.

இத­னால் அதிர்ச்­சி­ யடைந்த பெண் காவல்துறை­யில் புகார் அளித்­தார் என்று விசா­ர­ணை­யில் அரசு தரப்பு வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்.