விபத்தில் சிக்கிய சிறுமி
தங்ளினில் வியாழன் காலை நிகழ்ந்த விபத்தில் இரண்டு வயது சிறுமி காயம் அடைந்தார். தாமான் செராசி, குளுனி சாலை சந்திப்பில் இரண்டு கார்கள் சிக்கிய விபத்தில் ஜாகுவார் கார் தலைகீழாக கவிழ்ந்திருந்ததை சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகள் காட்டின. ஒரு காரில் பயணம் செய்த இரண்டு வயது சிறுமியை சுயநினைவுடன் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் குடிமைத் தற்காப்புப் படை சேர்த்தது. இந்த விபத்து குறித்து 32 வயது ஆண் ஓட்டுநரிடம் விசாரணை நடை பெற்று வருகிறது.
துப்பாக்கிகளை இறக்குமதி
செய்தவர் கைது
மாதிரி துப்பாக்கிகளையும் சஞ்சிகைகளையும் இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் 42 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை துவாஸ் துறைமுகத்தில் உரிமம் பெறாத 20 மாதிரி துப்பாக்கிகள், 54 சஞ்சிகைகள் சிங்கப் பூருக்கு அனுப்பப்பட்டிருந்ததை குடிநுழைவு, சோதனைச் சாவடி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவை கொண்டு சேர்க்கப்பட வேண்டிய நபரைத் தேடிப் பிடித்து காவல்துறையினர் கைது செய்து
பொருள்களை பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோதமாக இறைச்சி இறக்குமதி; $17,500 அபராதம்
மலேசியாவிலிருந்து அனுமதியின்றி ஆயிரம் கிலோவுக்கு மேல் இறைச்சி இறக்குமதி செய்த
28 வயது ஷெங் ஜிங்பின்னுக்கு $17,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. செங்காங் டிரேடிங் எண்டர் பிரைஸ் நிறுவனத்தின் பங்காளியான அவர் சட்ட விரோதமாக இறைச்சி இறக்குமதி செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். 2022 ஜூன் 2ஆம் தேதி காலை 10.00 மணி அளவில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக 1.183 கிலோ கோழி இறைச்சியை அவர் இறக்குமதி செய்தார். குடிநுழைவு சோதனைச் சாவடி அதிகாரிகள் லாரியை சோதனையிட்டபோது 145 அட்டைப் பெட்டிகளில் இறைச்சி இருப்பது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து சிங்கப்பூர் உணவு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

