தைவான் ரயில் சேவை; எஸ்டி இஞ்சினியரிங்கிற்கு $430 மி. ஒப்பந்தம்

தைவான் ரயில் சேவை; எஸ்டி இஞ்சினியரிங்கிற்கு $430 மி. ஒப்பந்தம்

2 mins read
8c69039d-c3a8-42e7-a9f0-ea51ed35eebe
-

தைவா­னின் கௌஷி­யோங் சிட்டி பெரு­வி­ரைவு ரயில் சேவை­யு­டன் எஸ்டி இஞ்­சி­னி­ய­ரிங் நிறு­வ­னம் $430 மில்­லி­யன் பெறு­மா­ன­முள்ள ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டுள்­ளது. புதிய கௌஷி­யோங் எம்­ஆர்டி சிவப்பு ரயில் பாதை­யின் தெற்­குப் பகுதி நீட்­டிப்­புக்­கான கட்­ட­மைப்பு ஒருங்­கி­ணைப்பு, திட்ட நிர்­வா­கம் ஆகி­ய­வற்­றில் எஸ்டி இஞ்­சி­னி­ய­ரிங் தலை­மை­தாங்­கும். அந்த ரயில் பாதை 11.27 கிலோ மீட்­டர் நீள­மா­னது. அதில் பூமிக்கு அடி­யில் ஆறு நிலை­யங்­களும் தரைக்கு மேல் ஒரு நிலை­ய­மும் உள்­ளன.

எஸ்டி இஞ்­சி­னி­ய­ரிங் நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்ள ஒப்­பந்­தத்­தின்­கீழ் தானி­யக்க கட்­ட­ணம் வசூ­லிப்பு முறை, தள­மேடை திரைக் கத­வு­கள், பணி­ம­னைக் கரு­வி­கள் உட்­பட மற்ற சேவை­

க­ளுக்­கான பணி­கள் மேற்­கொள்­ளப்­படும். இத்­திட்­டத்­துக்­கான பணி­களை இவ்­வாண்­டின் நடுப்

­ப­கு­தி­யில் எஸ்டி இஞ்­சி­னி­ய­ரிங் அர்­பன் சொல்­யூ­ஷன்ஸ் தொடங்­கும். இப்­ப­ணி­கள் ஒன்­பது ஆண்டுகளுக்கு நடை­பெ­றும்.

2030ஆம் ஆண்­டில் சிவப்பு ரயில் பாதைக்­கான தெற்­குப் பகுதி நீட்­டிப்பு நிறை­வ­டைந்­த­தும் தைவா­னின் தெற்­குப் பகு­தி­யில் உள்ள மூன்று தேசிய தொழிற்­பேட்டை பூங்­காக்­க­ளுக்கு அது ரயில் சேவை­களை வழங்­கும்.

அது­மட்­டு­மல்­லாது, கௌஷி­யோங் எம்­ஆர்­டி­யின் தற்­போ­தைய சிவப்பு, ஆரஞ்சு ரயில் பாதை­க­ளு­டன் புதிய ரயில் பாதை இணைக்­கப்­படும். இந்­தப் புதிய ஒப்­பந்­தத்­து­டன் சேர்த்து எஸ்டி இஞ்­சி­னி­ய­ரிங் நிறு­வ­னம் 50க்கும் மேற்­பட்ட நக­ரங்­களில் 200 'ஸ்மார்ட் மெட்ரோ' திட்­டங்­களில் ஈடு­பட்­டுள்­ளது. புதிய ரயில் பாதைக்­கான சமிக்ஞை கட்­ட­மைப்­புக்கு எஸ்டி இஞ்­சி­னி­ய­ரிங் தனது பங்­காளிகளு­டன் இணைந்து பொறுப்­பேற்­கும். தேவை­யான மின்­சா­ரத்தை ஹியூண்டே ரோட்­டம் வழங்­கும்.

"கௌஷி­யோங் சிட்டி எம்­ஆர்­டி­யு­டன் எங்­க­ளுக்கு இருக்கும் நீண்­ட­கா­லப் பங்­கா­ளித்­து­வத்தை இந்த ஒப்­பந்­தம் வலுப்­ப­டுத்­து­கிறது. எங்­கள் திட்ட நிர்­வா­கம், கட்­ட­மைப்பு ஒருங்­கி­ணைப்பு, பொறி­யி­யல் ஆற்­றல் ஆகி­யவை மீது அந்த நிறு­வ­னத்­துக்கு இருக்­கும் நம்­பிக்­கையை இது காட்­டு­கிறது," என்று அர்­பன் சொல்­யூ­ஷன்ஸ் எட் எஸ்டி இஞ்­சி­னி­ய­ரிங்­கின் தலை­வர் சியூ மென் லியோங் தெரி­வித்­தார். கடந்த இரண்டு ஆண்­டு­களில் கௌஷி­யோங் எம்­ஆர்­டி­யின் மஞ்­சள் ரயில் பாதை, சிவப்பு ரயில் பாதை­யின் வடக்­குப் பகுதி நீட்­டிப்பு ஆகி­ய­வற்­றி­லும் பணி­களை மேற்­கொள்­வ­தற்­கான ஒப்­பந்­தங்­களை எஸ்டி இஞ்­சி­னி­ய­ரிங் பெற்­றது.