சிங்கப்பூரின் முன்னோடி இசைக் கலைஞர்களில் ஒருவரும் கிட்டார் சகாப்தமுமான அலெக்சாண்டர் எஸ். அபிஷேகநாதன் (படம்) நேற்று செயிண்ட் லியூக் மருத்துவமனையில் காலமானார்.
அவருக்கு 97 வயது.
சிங்கப்பூர் வரலாற்றில் மிக முக்கியமான கிட்டார் இசைக்
கலைஞர் எனும் பெருமை திரு அபிஷேகநாதனைச் சேரும்.
அவருக்கு ஒரு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். பிரபல பாடகி-நடிகை ஜெசிந்தா அபிஷேகநாதன் இவருடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு அபிஷேகநாதனின் மரணம் பலரை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலர் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
1926ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்த திரு அபிஷேகநாதன் இசைக்கலைஞராக, இசையமைப்பாளராக, கல்வியாளராக முத்திரை பதித்தவர்.
கிட்டார் வாசிப்பதை அவர் சொந்தமாகவே கற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் இசைத்துறைக்கு அவர் ஆற்றிய பெரும் பங்களிப்புக்காக திரு அபிஷேகநாதனுக்கு கலாசாரப் பதக்கம் வழங்கப்பட்டது.