பழுதடைந்த பூட்டு: 3 மணி நேரம் சிக்கித் தவித்த தாய், சேய்

பழுதடைந்த பூட்டு: 3 மணி நேரம் சிக்கித் தவித்த தாய், சேய்

2 mins read
770636e3-f4ba-45ec-abb7-4b86db50cef2
-
Google News Preferred Icon

ஹோம்­டீம்­என்­எஸ் பிடோக் ரெசர்­வோ­ரில் உள்ள குழந்­தைப் பரா­ம­ரிப்பு அறை­யின் பூட்டு உடைந்­த­தில் அறைக்­குள் இருந்த பெண்­ணும் அவ­ரது இரண்டு மாதப் பெண் குழந்­தை­யும் வெளியே வர முடி­யா­மல் கிட்­டத்­தட்ட மூன்று மணி நேரம் சிக்­கித் தவித்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் கடந்த திங்­கட்­கி­ழமை நிகழ்ந்­தது. இரவு உணவு வாங்க 30 வயது திரு­மதி லோவும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரும் அங்கு சென்­றி­ருந்­த­னர். அப்­போது குழந்­தைப் பரா­ம­ரிப்பு அறைக்­குச் செல்ல வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­ட­தாக அவர் கூறி­னார்.

இரவு 7.30 மணி அள­வில் இரண்­டா­வது மாடி­யில் உள்ள குழந்­தைப் பரா­ம­ரிப்பு அறைக்­குள் தமது மனைவி குழந்­தை­யு­டன் சென்­ற­தா­க­வும் தாம் அறைக்கு வெளியே காத்­துக்­கொண்­டி­ருந்­த­தா­க­வும் திரு­மதி லோவின் கண­வர் கூறி­னார். அறை­யை­விட்டு வெளியே வர திரு­மதி லோ முற்­பட்­ட­போது அவ­ரால் கத­வைத் திறக்க முடியாமல் போனது. அந்த நிலை­யத்­தின் ஊழி­யர்­க­ளின் உத­வி­யைத் திரு லோ நாடி­னார். ஆனால் அந்­தக் கத­விற்­கான சாவி தங்­க­ளி­டம் இல்லை என்று அவ­ரி­டம் தெரி­விக்­கப்­பட்­டது.

சிறு பழு­து­பார்ப்­புப் பணி கார­ண­மாக அந்­தச் சாவி ஒப்­பந்­த­

தா­ரர் ஒரு­வ­ரி­டம் இருந்­த­தாக ஹோம்­டீம்­என்­எஸ் கூறி­யது. கிட்­டத்­தட்ட ஒரு மணி நேரம் கழித்து அந்த ஒப்­பந்­த­தா­ரர் அங்கு வந்­தார். ஆனால் கத­வின் பூட்டு பழு­த­டைந்­தி­ருந்­த­தால் அவ­ரால் அந்­தச் சாவி­யைப் பயன்­ப­டுத்தி கத­வைத் திறக்க முடி­ய­வில்லை. அத­னால் ரம்­பத்தைப் பயன்­

ப­டுத்தி பூட்டை அறுப்­பது போன்ற பல முயற்­சி­களில் அந்த ஒப்­பந்­த­தா­ரர் இறங்­கி­னார். கத­வைத் திறக்க மேற்­கொள்­ளப்­பட்ட அனைத்து முயற்­சி­களும் தோல்­வி­யில் முடிந்தன,

இதையடுத்து, இரவு 9.40 மணி அள­வில் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைக்­குத் தக­வல் அனுப்­பப்­பட்­டது. அடுத்த சில நிமி­டங்­களில் குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­கா­ரி­கள் அவ்­வி­டத்தை அடைந்­த­னர். தங்­கள் கரு­வி­க­ளைக் கொண்டு 15 நிமி­டங்­களில் அவர்­கள் கத­வைத் திறந்­த­னர்.

தமது மனைவி வெளியே வர முடி­யா­மல் தவித்­துக்­கொண்­டி­ருந்­த­போது கத­வில் இருந்த சிறு இடை­வெளி வழி­யா­க­வும் கைப்பேசி மூல­மா­க­வும் அவ­ரி­டம் பேசி­ய­தாக திரு லோ கூறி­னார். தாம் மட்­டும் அங்கு இருந்­தி­ருக்­கா­வி­டில் தமது மனைவி அறைக்­குள் மாட்­டிக்­கொண்­டது யாருக்­கும் தெரிந்திருக்காது என்­றார் அவர்.

இந்­தச் சம்­ப­வம் கார­ண­மாக தமது மனை­விக்­குக் கெட்ட

கன­வு­கள் வரு­வ­தா­க­வும் மின்­தூக்கி போன்ற இடங்­க­ளுக்­குள் செல்ல பயப்­ப­டு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

இதற்­கி­டையே, குழந்­தைப் பரா­ம­ரிப்பு அறை­யில் அவ­ச­ர­நிலை அழைப்பு பொத்­தா­னைப் பொருத்­தி­விட்­ட­தாக ஹோம்­டீம் என்­எஸ் தெரி­வித்­தது.

நிலை­யத்­தில் இருக்­கும் மூன்று குழந்­தைப் பரா­ம­ரிப்பு அறை­க­ளுக்­கும் எளி­தில் பயன்

­ப­டுத்­தக்­கூ­டிய கதவு பொருத்­தப்­படும் என்று அது உறுதி அளித்­தது. அது­வரை, குழந்­தை­க­ளைப் பரா­ம­ரிக்­கும் தாய்­மார்­க­ளுக்­காக வேறோர் அறை ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இது­போன்ற சம்­ப­வம் மீண்­டும் நிக­ழாது இருக்க தகுந்த நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என்று ஹோம்­டீம்­என்­எஸ் கூறி­யது.