உரிமம் இல்லாமல் வேன் ஓட்டிய குற்றத்துக்காக 33 வயது ரிசுவான் ரோமாட்டுக்கு விதிக்கப்பட்ட அபராதம், ஐந்து வாரச் சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. தமது மனைவி, மூன்று பிள்ளைகளையும் ஏற்றிக்கொண்டு, மழை பெய்துகொண்டிருந்தபோது அவர் வேன்
ஓட்டிச் சென்றார்.
காவல்துறையினர் அவரைத் துரத்தியபோது அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் வேனை நிறுத்தி, தமது குடும்பத்தாரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார் ரிசுவான்.

