சமய மறுவாழ்வுக் குழுவின் நிறுவனர் காலமானார்

சமய மறுவாழ்வுக் குழுவின் நிறுவனர் காலமானார்

2 mins read
5dbaf5ef-68b0-4d43-bb99-24bf7b79169c
-

சமய மறு­வாழ்­வுக் குழுவை நிறு­விய திரு அலி ஹாஜி முகம்­மது (படம்) நேற்று கால­மா­னார். அவ­ருக்கு 75 வயது.

தீவிர சம­யக் கொள்­கை­

க­ளால் வழி­மா­றிச் சென்­ற­வர்­ளுக்கு ஆலோ­சனை வழங்கி அவர்­களை மீண்­டும் சரி­யான பாதைக்­குக் கொண்டு வரும் சம­யக் கல்­வி­யா­ளர்­க­ளுக்­குப் பயிற்சி அளிக்க 2003ஆம் ஆண்­டில் இந்­தச் சமய மறு­வாழ்­வுக் குழு அமைக்­கப்­பட்­டது. இது ஒரு தொண்­டூ­ழிய அமைப்­பா­கும்.

2014ஆம் ஆண்­டில் சமய மறு­வாழ்­வுக் குழுவின் வளங்­கள் மற்­றும் ஆலோ­சனை மையத்­தை­யும் திரு அலி தொடங்­கி­னார்.

நேற்று காலை 9 மணி அள­வில் திரு அலி சுய­நி­னை­வின்றி கிடந்­த­தா­க­வும் அவர் அப்­போது மூச்­சு­வி­ட­வில்லை என்­றும் அவ­ரது மகன் டாக்­டர் முகம்­மது அலி செய்­தி­யா­ளர்­

க­ளி­டம் தெரி­வித்­தார்.

குடும்ப உறுப்­பி­னர் ஒரு­வர் ஆம்­பு­லன்சை அழைத்­த­தாக அறி­யப்­ப­டு­கிறது.

திரு அலி மர­ண­ம­டைந்­து­விட்­ட­தாக நேற்று காலை 11.30 மணி அள­வில் செங்­காங் பொது மருத்­து­வ­ம­னை­யில் உறுதி செய்­யப்­பட்­டது.

இத­யச் செய­லி­ழப்பு கார­ண­மாக திரு அலி இறந்­த­தாக அவ­ரது மகன் தெரி­வித்­தார்.

இறு­திச் சடங்­கிற்­காக அவ­ரது நல்­லு­டல் கத்­திஜா பள்­ளி­வா­ச­லுக்­குக் கொண்டு செல்­லப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

திரு அலி­யின் மர­ணம் குறித்து மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் வருத்­தம் தெரி­வித்­தார்.

"திரு அலி­யின் மர­ணச் செய்தி என்­னைத் துய­ரில் ஆழ்த்­தி­யுள்­ளது. சமய மறு­வாழ்­வுக் குழு­வின் இணை நிறு­வ­ன­ரான திரு அலிக்கு அஞ்­சலி செலுத்­து­கி­றேன்," என்று தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் அவர் பதி­விட்­டார்.

வன்­முறை, தீவி­ர­வா­தம் ஆகி­ய­வற்றை எதிர்­கொள்ள திரு அலி நிறு­விய சமய மறு­வாழ்­வுக் குழு பெரி­தும் கைகொ­டுத்து பெரும் பங்­க­ளித்­த­தாக திரு டியோ கூறி­னார்.

சமய மறு­வாழ்­வுக் குழு­வின் தலை­வர் பத­வி­யி­லி­ருந்து திரு அலி கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் வில­கி­னார். ஆனால் ஓய்வுபெற்ற கௌர­வத் தலை­வர் என்­கிற முறை­யில் அவர் அக்­

கு­ழு­வுக்குத் தொடர்ந்து வழி­

காட்­டி­னார்.

திரு அலி­யின் மர­ணம் தம்­மைத் துய­ரில் ஆழ்த்­தி­யி­ருப்­ப­தாக அதி­பர் ஹலிமா யாக்­கோப் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டார்.

தவ­றான வழி­யில் சென்­ற­வர்­க­ளைத் திருத்த சம­யக் கல்­வி­யா­ளர்­க­ளு­டன் திரு அலி அய­ராது பாடு­பட்­டார் என்று அதி­பர் ஹலிமா புக­ழா­ரம் சூட்­டி­னார்.

திரு அலி தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் என்றும் மலாய்/முஸ்லிம் சமூகத்தினரின் முக்கிய தூணாக இருந்தார் என்றும் தமது அனுதாபக் கடிதத்தில் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் ஒற்றுமைமிக்க பல இன, பல சமய சமுதாயத்தை உருவாக்குவதில் திரு அலியின் பங்களிப்பு பெரிது, முக்கியமானது என்றார் திரு லீ.