பண வெகுமதி ஊக்குவிப்பு திட்டம் மீண்டும் தொடக்கம்

பண வெகுமதி ஊக்குவிப்பு திட்டம் மீண்டும் தொடக்கம்

2 mins read
5102f6df-2c0c-456c-990d-3ef721941e15
-

காலை உச்சநேரத்தில் வடகிழக்கு தடத்திலிருந்து விரைவு பேருந்துக்கு மாறுவோருக்கு

காலை உச்ச நேரத்­தின்­போது வட­கி­ழக்கு ரயில் வழித்­த­டத்­தில் இருந்து விரைவு பேருந்­துச் சேவைக்கு மாறிச் செல்­லும் பயணி­க­ளுக்கு ரொக்க வெகு­மதி அளிக்­கக்­கூ­டிய ஓர் ஊக்­கு­விப்புத் திட்­டம், எட்டு மாத இடை­வெளிக்­குப் பிறகு வரும் திங்­கட் கிழமை மீண்­டும் தொடங்­கு­கிறது.

'விவே­கப் பய­ணத் திட்­டம்' என்று குறிப்­பி­டப்­படும் அந்­தத் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரின் வட­கி­ழக்கு வட்­டா­ரத்­திற்­குச் சேவை­யாற்­றும் 654, 660, 666, 671 மற்­றும் 672 ஆகிய ஐந்து நேரடி நகரப் பேருந்து சேவை­களை அந்­தத் திட்­டம் உள்­ள­டக்­கும்.

பொங்­கோல், செங்­காங், புவாங்­கோக் ஆகி­ய­வற்­றில் வசிக்கும் பய­ணி­கள், மெக்­பர்­சன், பாய லேபார், மரின் பரேட் ஆகி­ய­வற்றில் உள்ள வேலை இடங்­க­ளுக்கு காலாங்-பாய லேபார் விரை­வுச்­சாலை வழி­யாகச் செல்ல உத­வும் பேருந்து சேவை எண் 43e ஏற்­கெ­னவே திட்­டத்­தில் இடம்­பெற்றுள்ளது.

இந்த ஊக்­கு­விப்­புத் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­பட்டு இருப்­ப­தால், பொங்­கோல், செங்­காங், புவாங்­கோக், ஹவ்­காங் ஆகி­ய­வற்­றில் வசிக்­கும் மக்­கள் சிங்­கப்­பூ­ரின் கிழக்கு, மத்­திய பகு­தி­களில் உள்ள வேலை­யிடங்­களுக்­கு வசதியாக சென்று வரலாம்.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணையம் அறிக்கை ஒன்­றில் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தது. இந்த ஆறு விரைவுப் பேருந்துச் சேவை­க­ளைக் காலக்­கிரம முறைப்­படி பயன்­படுத்து­வோர் செலுத்த வேண்டிய பேருந்துக் கட்­ட­ணத்­தில் பாதிக்கும் மேற்­பட்ட தொகையை விவே­கப் பயணத் திட்­டத்­தின் மூலம் ஈட்­டக்­கூ­டிய புள்­ளி­க­ளைக் கொண்டு ஈடு­செய்­து­வி­ட­லாம்.

வழக்­க­மான பேருந்து, எம்­ஆர்டி கட்­ட­ணங்­களில் பெரி­ய­வர்­கள் செல்­வ­தற்கு உரிய கட்டணத்தை­விட விரை­வுப் பேருந்­தில் 60 காசு அதி­க­மாக கட்­ட­ணம் செலுத்த வேண்­டும்.

பய­ணத் தொலை­வைப் பொறுத்து கட்­ட­ணம் விதிக்­கப்­ப­டு­கிறது. விவே­கப் பய­ணத் திட்­டத்­தில் சேர்ந்­து­கொள்ள வேண்­டு­மா­னால் 'டிரான்­சிட்­லிங்க் சிம்ப்­ளிகோ வெப்' என்ற இணைய வாசலில் அல்­லது 'டிஎல் சிம்ப்­ளிகோ' என்ற செய­லி­யில் பய­ணி­கள் தங்­க­ளைப் பதிந்­து­கொள்ள வேண்­டும்.

இதற்கு சில நிபந்­த­னை­களை அவர்­கள் நிறை­வேற்ற வேண்­டும்.

பதிந்­த­தும் பய­ணி­கள் 43e, 654, 660, 666, 671 அல்­லது 672 ஆகிய பேருந்து சேவை­களில் வார நாள் களில் காலை 7 மணிக்­கும் 9 மணிக்­கும் இடை­யில் மாறிச் சென்று தாய் செங், மெக்­பர்­சன், பாய லேபார், பார்க்வே பரேட், ஷென்­டன் வே அல்­லது மெரினா பொலி­வார்ட் ஆகி­ய­வற்­றில் உள்ள இடங்­களில் இறங்­கிக்கொண்­டால் ஒரு பேருந்து பய­ணத்­திற்கு 150 புள்­ளி­கள் கிடைக்­கும்.

அப்­படி 500 புள்­ளி­கள் சேர்ந்­த­தும் அவற்றை ரொக்­க­மாக மாற்­றிக் கொள்­ள­லாம். 500 புள்­ளி­களுக்கு $5 கிடைக்­கும்.