பேருந்து, ரயில் போக்குவரத்தில் கருணையுடன் பயணிகள் நடந்துகொள்ள ஊக்கமூட்டும் கருப்பொருள் ரயில் தொடக்கம்

பேருந்து, ரயில் போக்குவரத்தில் கருணையுடன் பயணிகள் நடந்துகொள்ள ஊக்கமூட்டும் கருப்பொருள் ரயில் தொடக்கம்

2 mins read
31c4f0ac-cd8e-4013-92d2-497c99dff526
-

பொதுப் போக்­கு­வ­ரத்­தில் பய­ணம் செய்­யும்­போது பய­ணி­கள் பல­வற்றை­யும் சிந்­தித்­துப் பார்த்து கரு­ணை­யு­டன் நடந்­து­கொள்ள வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்டு உள்­ளது. இந்த இலக்­கு­டன் நேற்று ஒரு கருப்­பொ­ருள் ரயில் சேவை­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டது.

அந்த ரயி­லில் புதிய சுவ­ரொட்டி­களும் காட்சி அம்­சங்­களும் இடம்­பெற்றுள்ளன.

ரயில்­ பயணிகள் கரு­ணை­யுடன் நடந்­து­கொள்ள வேண்­டும் என்­பதைப் பிர­தி­ப­லிக்­கும் காட்சி அம்­சங்­களு­டன் அந்த ரயி­லின் ஒரு பெட்டி வடி­வ­மைக்­கப்­பட்டு இருக்­கிறது.

சிங்­கப்­பூர் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யைச் சேர்ந்த மாண­வர்­கள் அதை புத்தாக்கத்துடன் வடி­வ­மைத்து இருக்­கி­றார்­கள்.

நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சுக்­கான மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் பே யாம் கெங் நேற்று இந்த இயக்­கத்­தைத் தொடங்கி வைத்­தார்.

பொதுப் போக்­கு­வ­ரத்­தில் மக்கள் மேலும் கரு­ணை­யு­டன் நடந்­து­கொள்ள ஊக்­க­மூட்டி இந்த இயக்­கம் அதைச் சாதிக்­கும் என்று தான் நம்­பு­வ­தாக தொடக்க நிகழ்ச்­சி­யில் பேசி­ய­போது அவர் கூறி­னார்.

"பொதுப் போக்­கு­வ­ரத்­தில் கருணை­யு­டன் நடந்­து­கொண்­டால், அப்­படி நடந்­து­கொள்­வோருக்­கும் அத­னால் மகிழ்ச்சி.

"பேருந்­தாக இருந்­தா­லும் ரயி­லாக இருந்­தா­லும் ஒவ்­வொரு பய­ண­மும் மகிழ்ச்­சி­க­ர­மா­ன­தாக, இன்­ப­மா­ன­தாக அமைய வேண்­டும் என்­ப­தற்­காக இந்­தக் கருணை இயக்­கத்தை மேம்­படுத்த நாங்கள் விரும்­பு­கி­றோம்," என்­றா­ர­வர். திரு பே டோபி­காட் நிலை­யத்­தில் இருந்து ஊட்­ரம் பார்க் நிலை­யத்­திற்கு அந்த ரயிலில் சென்­றார்.

'மற்­ற­வர்­களை நினைத்து நடந்துகொள்­வது நல்­ல­தாக தெரி­கிறது' என்­பது இந்த ஆண்டு இயக்­கத்­தின் கருப்­பொ­ருள். .

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் 2009ஆம் ஆண்டு ஓர் இயக்­கத்­தைத் தொடங்­கி­யது. 'பொதுப் போக்­கு­வ­ரத்­தில் கருணை' என்ற அந்த இயக்­கம் ஆண்­டு­தோ­றும் இடம்­பெற்று வரு­கிறது.

பொதுப் போக்­கு­வ­ரத்­துச் சேவை­களில் மற்­ற­வர்­க­ளைச் சிந்தித்­துப் பார்த்து கரு­ணை­யுடன் பய­ணி­கள் நடந்­து­கொள்ள அந்த இயக்­கம் ஊக்­க­மூட்­டு­கிறது.

இத­னி­டையே, "நிலப் போக்கு­வரத்து ஆணை­யத்­து­டன் சேர்ந்து நாங்­கள் செயல்­பட்டு இருப்­பது எங்­க­ளு­டைய கனவு நன­வாகி இருப்­ப­தைக் காட்­டு­கிறது," என்று சிங்­கப்­பூர் பலதுறைத் தொழிற்­கல்­லூ­ரி­யைச் சேர்ந்த கைருன்நிஷியா என்ற மாணவி தெரி­வித்­தார். இவர், கருப்­பொருளு­டன் கூடிய ரயிலை வடி­வ­மைக்க உத­விய நால்­வர் குழு­வில் ஒரு­வ­ராக இடம்­பெற்­றி­ருந்­தார்.

கருப்­பொ­ருள் ரயில் வட­கிழக்கு வழித்­த­டத்­தில் மார்ச் 17 முதல் மே 11ஆம் தேதி வரை இயங்­கும்.