செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
a82ae070-ea8a-46c5-999b-745f4824fb8e
-

நிறுவன இயக்குநர் மீது நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு

நான்கு நிறுவனங்களின் இயக்குநராக இருந்த பெர் போ ஹுவாட், 57, என்பவர், வீடு ஒன்றைக் கட்டுவதற்காக குறைந்தது $8 மில்லியன் தொகைக்கான காசோலையைக் கொடுக்கும்படி ஆடவர் ஒருவரைக் கேட்டுக்கொண்டார்.

ஆனால் கட்டுமானப் பணிகள் 2021ஆம் ஆண்டில் நின்றுவிட்டன. அந்த இயக்குநர், $2.3 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையைத் தவறாகக் கையாண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

நம்பிக்கை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. இயக்குநர் பெர், அந்தக் குற்றத்தை 2019ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதிக்கும் டிசம்பர் 4ஆம் தேதிக்கும் இடையில் செய்ததாகக் கூறப்படுகிறது.

லிம் பீ ஹுவாட் என்பவருக்குச் சொந்தமான எட்டு காசோலைகள் மூலம் இயக்குநர் பெர் கணக்கில் பணம் போடப்பட்டு, அந்தப் பணம் அவரிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. லிம் பீ ஹுவாட் யார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் 47 வயதுள்ள மற்றோர் ஆடவர் புலன்விசாரணையில் உதவி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இயக்குநர் பெர்ருக்கு $200,000 பிணை அனுமதிக்கப்பட்டது. இந்த வழக்கில் பிணை மறுபரிசீலனை மார்ச் 21ஆம் தேதி நடக்கும்.

ஏமாற்றியதாகக் கூறப்படும் முன்னாள் அதிகாரி மீது புதிய குற்றச்சாட்டு

ரசாக் முகம்மது லாசிம், 56, என்பவர், சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (முயிஸ்) மதரசாக்களுக்கான இயக்குநராக முன்பு இருந்தார்.

அவர், இப்போது 'இர்ஷ்யார்ட் டிரஸ்ட் லிமிட்டெட்' (ஐடிஎல்) என்ற நிறுவனத்தின் பங்குதாரராகவும் ஓர் இயக்குநராகவும் இருக்கிறார்.

ரசாக், 'தெமாசெக் ஃபவுன்டேஷன் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் கிட்டத்தட்ட $785,000 பணத்தை ஏமாற்றி இருக்கிறார் என்று கூறப்பட்டது. அவர், 2020 பிப்ரவரி 7ஆம் தேதி அல்லது ஏறக்குறைய அந்தத் தேதியில் $68,629 தொகையைத் தவறாகக் கையாண்டு இருக்கிறார் என்று இப்போது கூறப்படுகிறது. இதன் தொடர்பில் நேற்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்தப் பணத்தை 'கே-ஓரியண்ட் லாமிடெக்' என்ற நிறுவனம், ஐடிஎல் நிறுவனத்திற்கு அனுப்பி இருந்தது. ரசாக்கிற்கு $30,000 பிணை அனுமதிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஏப்ரல் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ரகசிய சங்கங்களை ஒடுக்க

நடவடிக்கை: 13 பேர் கைது

காவல்­து­றை­யின் உள­வுப் பிரிவு அதி­கா­ரி­களும் ஏழு காவல்­துறை தரைப் பிரி­வு­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­களும் இம்மாதம் 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி­வரை ரகசிய சங்­கங்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கையை எடுத்­த­னர்.

நாடு முழு­வ­தும் உள்ள 40க்கும் மேற்­பட்ட பொதுப் பொழு­து­போக்கு நிலை­யங்­கள், இரவு விடு­தி­கள், உணவு, பானக் கடை­கள் சோதிக்­கப்­பட்­டன. கிட்­டத்­தட்ட 150 பேரையும் அதி­கா­ரி­கள் சோதித்­த­னர். முடிவில் 13 ஆட­வர்­க­ளை அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர். அவர்­கள் 19 வயது முதல் 26 வயது வரைப்­பட்­ட­வர்­கள்.

கைதான அனை­வ­ரும் விசாரிக்­கப்­பட்டு வரு­வ­தாக காவல்­துறை நேற்று அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

யாரா­வது ஒரு­வர், சட்­ட­விரோத ரக­சிய சங்க உறுப்பினர் என்று தீர்ப்­பா­னால் அவருக்கு மூன்று ஆண்டு­கள் வரை சிறைத் தண்­டனை $5,000 வரை அபரா­தம் அல்­லது இரண்­டும் தண்­ட­னை­யா­கக் கிடைக்கும். பொது பாது­காப்­புக்கு, அமை­திக்கு, சமூகக் கட்­டொழுங்­கிற்கு மிரட்­டல் விடுக்­கும் சட்­ட­விரோத செயல்­களை ரக­சிய சங்க காரி­யங்­களைத் தான் ஒரு­போ­தும் சகித்­துக் கொள்­ளப்­போ­வ­தில்லை என்று காவல்துறை அறிக்­கை­யில் தெரி­வித்­தது.