அதிபர் ஹலிமா 3 நாள் மலேசிய பயணம்; ஆர்க்கிட் மலருக்கு அதிபர் பெயரிடப்படும்

அதி­பர் ஹலிமா யாக்­கோப், மலேசிய மாமன்­னர் சுல்­தான் அகம்­மது ஷாவின் அழைப்பை ஏற்று நாளை முதல் மலே­சி­யா­வுக்கு மூன்று நாள் அதி­கா­ரத்­துவ பய­ணம் மேற்­கொள்­கி­றார்.

கோலா­லம்­பூ­ரில் உள்ள மாமன்­ன­ரின் வசிப்­பி­ட­மான இஸ்­தானா நெகா­ரா­வில் அதி­பர் ஹலி­மா­வுக்கு அதி­கா­ர­பூர்வ வர­வேற்பு அளிக்­கப்­படும். அதி­பருக்கு விருந்­து அளித்து சிறப்பிக்கப்படும்.

அதி­பர் ஹலி­மா­வின் பெயர் ஆர்க்­கிட் மலர் ஒன்­றுக்­குச் சூட்­டப்­படும். வெளி­நாட்டு தலை­வர் ஒரு­வர் மலே­சி­யா­வுக்கு அதி­கா­ர­பூர்வ வருகை அளிக்­கை­யில், அந்­தத் தலை­வ­ரின் பெய­ர் ஆர்க்­கிட் மல­ருக்குச் சூட்­டப்­ப­டு­வது இதுவே முதல்­முறை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சிங்­கப்­பூ­ரின் வெளி­யு­றவு அமைச்சு நேற்று இந்த விவ­ரங்­களைத் தெரி­வித்­தது. தம் மூன்று நாள் பய­ணத்­தின்­போது மலே­சிய பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிமை அதி­பர் ஹலிமா சந்­திப்­பார்.

மலே­சிய பெண் அர­சி­யல்­வாதி­க­ளை­யும் அதி­பர் சந்­திப்­பார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் வேந்­தர் என்ற முறை­யில் அதி­பர் ஹலிமா, மலாயா பல்­க­லைக்­க­ழக வேந்­த­ரும் பேராக் சுல்­தா­னு­மான நஸ்­ரின் ஷாவை சந்­திப்­பார்.

அதி­பர் ஹலிமா, மலே­சி­யா­வுக்கு மேற்­கொள்­ளும் முதல் அதி­கா­ர­பூர்வ பய­ணம் இதுவே ஆகும். மலே­சிய மாமன்­னர் 2022 அக்­டோ­ப­ரில் சிங்­கப்­பூ­ருக்கு வருகை அளித்­தார். அத­னை­அடுத்து அதி­ப­ரின் மலே­சிய பயணம் இடம்­பெ­று­கிறது.

மலே­சிய பய­ணத்­தின்­போது அதி­ப­ரும் மலே­சிய மாமன்­ன­ரும் இஸ்­தானா நெகா­ரா­வில் மரக்­கன்று ஒன்றை நடு­வார்­கள்.

மலே­சிய பய­ணத்­தில் அதி­பர் ஹலி­மா­வு­டன் அவரின் கண­வர் முகம்­மது அப்­துல்லா அல்­ஹாப்­ஷியும் செல்­வார். இரு­வ­ரை­யும் சிறப்­பிக்­கும் வகை­யில் ஆர்க்­கிட் மலருக்கு இவர்­க­ளின் பெயர் சூட்­டப்­படும்.

அதி­ப­ரு­டன் அமைச்­சர்­களும் அதி­கா­ரி­களும் செல்­கி­றார்­கள். அதி­பர் வெளி­நாடு சென்­றி­ருக்­கை­யில், அதி­பர் ஆலோ­சனை மன்­றத்­தின் தலை­வர் எடி டியோ இடைக்­கால அதி­ப­ராக இருப்பார்.

அதி­பர் ஹலிமா மலே­சி­யா­வில் சிங்­கப்­பூ­ரர்­களைச் சந்­திப்­பார். தொழில்­துறை தலை­வர்­க­ளுடன் உரை­யா­டு­வார். வெளி­நாட்டு சிங்­கப்­பூ­ரர்­கள் அளிக்­கும் விருந்­தி­லும் அவர் கலந்­து­கொள்­வார்.

இத­னி­டையே, அதி­பர் ஹலிமா மலே­சி­யா­வின் பெர்­னாமா செய்தி நிறு­வ­னத்­துக்கு அளித்த மின்னஞ்­சல் பேட்டியில் மலே­சி­யா­வும் சிங்­கப்­பூ­ரும் பல துறை­களில் வர்த்­தக, முத­லீட்டு உற­வு­க­ளைப் பலப்­ப­டுத்த முடி­யும்; புதிய துறை­களில் ஒத்­து­ழைக்க முடி­யும் என்று தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!