சிங்கப்பூரில் கலாசாரங்களைக் கட்டிக்காத்து அந்தத் தேர்ச்சியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சாதனை படைத்துள்ள இரண்டு பேரும் இரு அமைப்புகளும் வரும் செவ்வாய்க்கிழமை அங்கீகரித்து பாராட்டப்படவிருக்கிறார்கள்.
அவர்களுக்குத் கலாசார, மரபுடைமை விருது வழங்கி தேசிய மரபுடைமைக் கழகம் சிறப்பிக்கும்.
சிங்கப்பூரில் ஆர்க்கிட் மலர் வளர்ப்பில் 60 ஆண்டு காலத்திற்கும் அதிக அனுபவம் கொண்ட சையது யூசூப் அல்ச கோஃப், 88, கரகக் கலைஞர் பாலகிருஷ்ணன் ராமசாமி (படம்) ஆகியோரும் குனோங் சாயாங் சங்கம், சிங்கப்பூர் வூஷூ கடல்நாக சிங்க நடன கூட்டமைப்பு என்ற இரு அமைப்புகளும் சிறப்பிக்கப்படவிருக்கின்றன.
திரு பாலகிருஷ்ணன், 67, தனது 18வது வயது முதல் கரகத்தை சோடிப்பதில் ஈடுபட்டு வரு பவர்.
ஸ்ரீ மாரியம் மனின் சின்னமாக கருதப் படும் கரகம் மலர்களாலும் இதர மங்கலப் பொருள்களாலும் அலங்கரிக்கப்படும். அந்தக் கரகத்தை தலையில் வைத்துக்கொண்டு தீமிதி போன்ற சமய நிகழ்ச்சிகளில் பண்டாரம் கரகாட்டம் ஆடுவார்.
இந்தக் கலையில் 30க்கும் மேற்பட்ட ஆண்டு அனுபவம் வாய்ந்த திரு பாலகிருஷ்ணன். இக்கலையை சவுத் பிரிட்ஜ் ரோடு மாரியம்மன் கோயிலின் இளம் தொண்டூழியர்களுக்குப் போதித்து இருக்கிறார்.
இந்தப் பாரம்பரியம் பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்த இவர் பயிலரங்குகளையும் நடத்தி இருக்கிறார்.

