கரகம் சோடிப்பு கலை காக்கும் கலைஞருக்கு அங்கீகாரம்

கரகம் சோடிப்பு கலை காக்கும் கலைஞருக்கு அங்கீகாரம்

1 mins read
ce1aa6a1-75dc-4911-8498-d955ba397785
-

சிங்­கப்­பூ­ரில் கலா­சா­ரங்­க­ளைக் கட்­டிக்­காத்து அந்­தத் தேர்ச்­சியை அடுத்த தலை­மு­றைக்கு கொண்டு சென்று சாதனை படைத்­துள்ள இரண்டு பேரும் இரு அமைப்­பு­களும் வரும் செவ்­வாய்க்­கி­ழமை அங்­கீ­க­ரித்து பாராட்­டப்­ப­ட­வி­ருக்­கி­றார்­கள்.

அவர்­க­ளுக்குத் கலா­சார, மர­பு­டைமை விருது வழங்­கி தேசிய மரபுடை­மைக் கழ­கம் சிறப்­பிக்­கும்.

சிங்­கப்­பூ­ரில் ஆர்க்­கிட் மலர் வளர்ப்­பில் 60 ஆண்டு காலத்­திற்­கும் அதிக அனு­ப­வம் கொண்ட சையது யூசூப் அல்­ச கோஃப், 88, கரகக் கலைஞர் பால­கி­ருஷ்­ணன் ராம­சாமி (படம்) ஆகி­யோ­ரும் குனோங் சாயாங் சங்­கம், சிங்­கப்­பூர் வூஷூ கடல்­நாக சிங்க நடன கூட்­ட­மைப்பு என்ற இரு அமைப்­பு­களும் சிறப்­பிக்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றன.

திரு பால­கி­ருஷ்­ணன், 67, தனது 18வது வயது முதல் கர­கத்தை சோடிப்­பதில் ஈடு­பட்டு வரு பவர்.

ஸ்ரீ மாரியம் ம­னின் சின்ன­மாக கருதப் படும் கர­கம் மலர்களா­லும் இதர மங்­க­லப் பொருள்க­ளாலும் அலங்­கரிக்­கப்­படும். அந்­தக் கர­கத்தை தலை­யில் வைத்­துக்­கொண்டு தீமிதி போன்ற சமய நிகழ்ச்­சி­களில் பண்டாரம் கர­காட்­டம் ஆடு­வார்.

இந்­தக் கலை­யில் 30க்கும் மேற்­பட்ட ஆண்டு அனு­ப­வம் வாய்ந்­த­ திரு பால­கி­ருஷ்­ணன். இக்கலையை சவுத் பிரிட்ஜ் ரோடு மாரி­யம்­மன் கோயி­லின் இளம் தொண்­டூ­ழி­யர்­க­ளுக்­குப் போதித்து இருக்­கி­றார்.

இந்­தப் பாரம்­ப­ரி­யம் பற்­றிய புரிந்­து­ணர்வை மேம்­ப­டுத்த இவர் பயி­ல­ரங்­கு­க­ளை­யும் நடத்தி இருக்­கி­றார்.