செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
adf322ba-15e6-48be-8086-bb6056bf076a
-

நினைவாற்றல் இழப்பு பிரச்சினை: மருத்துவர் வலியுறுத்து

சிங்­கப்­பூ­ரில் நினை­வாற்­றல் இழப்பு கார­ண­மாக அதிக மக்­கள் பாதிக்­கப்­படுவார்­கள் என்­ப­தால் அந்­தப் பிரச்சினை­யில் அதிக கவ­னம் செலுத்த வேண்­டும் என்று செயின்ட் லியுக்ஸ் மருத்­து­வ­ம­னை­யின் இணைப் பேரா­சி­ரி­யர் டாக்டர் டான் பூன் இயாவ் தெரி­வித்துார்.

அந்­தக் குறை­பாடு உள்­ள­வர்­க­ளுக்­கான பரா­ம­ரிப்பு நிலை மேம்­படும் வகை­யில் மேலும் பல­வற்­றைச் செய்ய வேண்டி இருக்­கும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

மக்­கள்­தொகை மூப்­ப­டை­வது கூடி வரு­கிறது. வயது கூடு­வ­தால் நினை­வாற்­றல் இழப்பு அதி­க­ரிக்­கும் என்பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

செயின்ட் லியுக்ஸ் மருத்­து­வ­மனை புக்­கிட் பாத்தோக்கில் அமைந்­துள்­ளது. அந்த மருத்­து­வ­மனை, நினை­வாற்­றல் இழப்பு பாதிப்­புக்கு உள்­ள­வர்களுக்குச் சிகிச்சை அளிப்­ப­தற்­காக படுக்கைப் பிரிவு (வார்டு) ஒன்றை 15 ஆண்டுகளுக்கு முன்­ன­தாக அமைத்­தது.

அத்­த­கைய வார்டை அமைத்த முதல் சமூக மருத்துவமனை இது­தான். நினை­வாற்­றல் இழப்பு பாதிப்பு உள்­ளவர்­க­ளுக்குச் சிறப்புத் தேவை­கள் அவசியம். அவர்களுக்கு நிபுணத்­துவ பரா­ம­ரிப்­பும் அவ­சி­யம் என்பதை அங்­கீ­க­ரிக்­கும் வகை­யில் அந்த மருத்­து­வ­மனை அந்த வார்டை அமைத்­தது.

அதிக வாடகை பெற மூவறை வீடு ஆறு அறை வீடாகிறது

சிங்கப்பூரில் வீட்டு வாடகை தொடர்ந்து இந்த ஆண்டிலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், சொத்து முதலீட்டாளர்கள் அதிக வாடகையை உடனடியாக சம்பாதிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கூட்டுரிமை வீட்டில் நடு நடுவே தடுப்புகள் அமைத்து அதிக அறைகளை உருவாக்குகிறார்கள்.

அவற்றை வாடகைக்கு விடுகிறார்கள். பீப்பிள்ஸ் பார்க் காம்பிளக்ஸ், ஈஸ்ட்பாய்ண்ட் கிரீன், சீமெய் கிரீன் கொண்டோ, ரியோ விஸ்டா, ஆர்ச்சர்ட் பார்க் கொண்டோமினியம், தி செய்ல் ஆகியவற்றில் அமைந்துள்ள பல வீடுகள் பலவும் தங்கும் வசிப்பிடங்களாக மாற்றப்பட்டு இருப்பதாக சண்டே டைம்ஸ் தெரிவித்தது.

எடுத்துக்காட்டாக, சைனாடவுனில் உள்ள பீப்பிள்ஸ் பார்க் காம்பிளக்சில் இருக்கும் ஒரு மூவறை வீட்டில் மேலும் மூன்று படுக்கை அறைகள் சேர்க்கப்பட்டு அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக வாடகைக்கு விடப்பட்டு உள்ளன.

அந்த வீடு 1,173 சதுர அடி பரப்புள்ளது. அது மாதம் சுமார் $4500 வாடகைக்கு முன்பு விடப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட மேலும் மூன்று அறைகளும் வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து வீட்டு உரிமையாளர் வாடகையாக மாதம் $8,000க்கும் அதிக தொகையை இப்போது பெறுகிறார். பிடோக்கில் கேசாஃபினா புளோக்கில் உள்ள மூவறை வீடு ஆறு அறை வீடாக்கப்பட்டு ஒவ்வொர் அறையும் $1,100 முதல் $1,800 வரை மாத வாடகைக்கு விடப்பட்டு உள்ளது.