மறுசுழற்சி பொருள்கள் நீலப் பெட்டி; 140 இடங்களில் பெறலாம்

2 mins read
13451e8d-bab9-45e5-a702-455791fef2c4
-

சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் குடும்­பங்­கள் இப்­போது 140க்கும் மேற்­பட்ட இடங்­களில் செயல்­படும் இயந்­தி­ரங்­களில் இருந்து இல­வ­ச­மாக மறு­சு­ழற்சி பெட்­டி­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

நீலப் பெட்டி என்று குறிப்­பி­டப்­படும் அந்­தப் பெட்­டி­களை மடக்கி பையைப் போல வைத்­துக்­கொள்­ள­லாம். தண்­ணீ­ரில் சுத்­தப்­ப­டுத்­த­லாம், பல­முறை பயன்­ப­டுத்­த­லாம்.

மறு­சு­ழற்­சிக்கு உத­வும் பொருள்­களை முறைப்­படி அதற்­கான பெட்­டி­யில் சேர்ப்­பதை எளி­தாக்­கு­வது இதன் நோக்­கம்.

இந்­தப் பழக்­கத்தை மக்­கள் வழக்­க­மாக்­கிக் கொள்ள வேண்­டும் என்­ப­தும் இலக்கு. இந்த நீலப் பெட்­டி­கள் சென்ற ஆண்டு நவம்­பர், டிசம்­ப­ரில் ஐந்து அக்­கம்­பக்­கங்­களில் ஒரு முன்­னோ­டித் திட்­ட­மாக விநி­யோ­கிக்­கப்­பட்­டன.

ஃபெங்ஷான், செம்­ப­வாங் வெஸ்ட், தெம்­ப­னிஸ் நார்த், இயோ சூ காங், யூஹுவா ஆகி­ய­வற்­றில் வசிக்­கும் 8,600க்கும் மேற்­பட்ட குடும்­பங்­கள் அந்­தப் பெட்­டி­களைப் பெற்­றுக்­கொண்­டன.

நீலப் பெட்­டி­களை நாடு முழு­வ­தும் விநி­யோ­கிக்­கும் நடை­முறை நேற்று தொடங்­கி­யது. வீட்­டில் ஒரு மூலை­யில் மறு­சுழற்சி பொருள்­களை சேக­ரித்து வைக்­கும் பழக்­கம் மக்­க­ளி­டையே இதன்­ மூ­லம் உரு­வா­கும் என்­பது நம்­பிக்கை.

சரி­யான முறை­யில் பொருள்­களை மறு­சு­ழற்­சிக்கு உட்­ப­டுத்­து­வது அவ­சி­யம் என்­பதை அந்­தப் பெட்டி மக்­க­ளுக்கு நினை­வூட்­டும் என்று நேற்­றைய நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்புற மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஏமி கோர் கூறி­னார்.

நீலப் பெட்டி நிரம்­பி­ய­தும் அதி­லுள்ள மறு­சு­ழற்­சிப் பொருள்­களை அவற்­றுக்­கான குப்­பைத் தொட்­டி­களில் போட்­டு­வி­ட­லாம். அல்­லது மறு­சு­ழற்சி குழாய் குப்­பைத்­தொட்­டி­களில் போட்­டு­வி­ட­லாம். இந்­தத் தொட்­டி­கள் புதிய வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக புளோக்­கு­களில் இருக்­கின்­றன.

நீலப் பெட்­டி­யில் 5 கிலோ தாள்கள், பிளாஸ்­டிக், உலோக, கண்­ணா­டிப் பொருள்­களை நிரப்ப முடி­யும். கழிக்­கப்­படும் மின்­ன­ணுப் பொருள்­க­ளை­யும் அதில் போட்டு வைக்­க­லாம்.

எந்­தெந்த பொருள்­களை மறு­சு­ழற்­சிக்கு உட்­ப­டுத்த முடி­யும் என்­பவை பற்­றிய விவ­ரங்­கள் எல்லாம் அந்­தப் பெட்­டி­யில் இருக்­கும். அந்­தப் பெட்­டியை நடு­வில் தடுத்து வைத்­துக்­கொண்டு மறு­சுழற்­சிப் பொருள்­களை தனி­யா­கப் பிரித்து போட­லாம்.

பொது­மக்­கள் தங்­க­ளு­டைய அடை­யாள அட்டை அல்­லது சிங்­பாஸ் மின்­னி­லக்க அடை­யாள அட்டை போன்­ற­வற்­றைப் பயன்­ படுத்தி நீலப் பெட்­டியை இயந்­தி­ரத்­தில் இருந்து ஏப்­ரல் 30ஆம் தேதிவரை பெற்­றுக்­கொள்­ள­லாம்.

அந்­தத் தேதிக்­குப் பிறகு பெட்­டி­கள் ஏதே­னும் மிஞ்­சி­யி­ருந்­தால் அவற்றை பொதுத்­துறை, தனி­யார் துறை ஆகி­ய­வற்­றைச் சேர்ந்­த­வர்­க­ளோ­டும் பொதுமக்­க­ளோ­டும் சேர்ந்து செயல்­பட்டு தான் விநி­யோ­கிக்­கப் போவ­தாக தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் குறிப்­பிட்­டது.