சிங்கப்பூர் கார்-வேறு ஒரு கார் மோதல்; 4 மலேசியர்கள் காயம்

சிங்கப்பூர் கார்-வேறு ஒரு கார் மோதல்; 4 மலேசியர்கள் காயம்

1 mins read
897de015-5563-46a3-ba4b-c13dbdbbc403
-

சிங்­கப்­பூ­ரில் பதிவு செய்­யப்­பட்ட ஃபெராரி ஆடம்­பர கார், ஜோகூரில் மலே­சி­யா­வின் வடக்கு-தெற்கு விரை­வுச்­சா­லை­யில் டொயோட்டா கார் ஒன்­றின் பின் பக்­கம் இடித்த விபத்­தில் டொயோட்டா காரில் இருந்த மலே­சி­யர் நால்­வர் காயம் அடைந்­த­னர்.

இச்சம்­ப­வம் ஜோகூ­ரில் வெள்­ளிக்­கி­ழமை காலை 7.25 மணிக்கு நிகழ்ந்­த­தாக மலே­சிய காவல்­துறை தெரி­வித்­தது.

வெள்ளை நிற ஃபெராரி காரை ஓட்­டி­வந்த சிங்­கப்­பூ­ரரான 22 வயது ஆட­வர் வாக­னத்­தின் கட்­டுப்­பாட்டை இழந்து டொயோட்டா கார் மீது இடித்­து­விட்­ட­தாக மூவார் மாவட்ட காவல்­துறை தலை­வர் ரியாஸ் முக்­லிஷ் அஸ்­மான் அஜிஸ் கூறி­னார்.

இதன் விளை­வாக இரண்டு வாக­னங்­களும் சாலை­யின் வலது பக்­கம் சறுக்கி ஓடி­ய­தாக அந்த அதி­காரி கூறி­யதாக மலாய் நாளி­தழ் கோஸ்மோ தெரி­வித்தது.

காயம் அடைந்த மலே­சி­யர்­களுக்கு வயது 50க்கும் அதி­கம் என்று அந்த அதி­காரி கூறி­னார்.

ஃபெராரி காரை ஓட்­டி­வந்­த­வர் காயம் அடைந்­தாரா என்­பது தெரி­ய­வில்லை.